சென்னை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் தனியாக செல்பவர்களை குறிவைத்து வழிபறியில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் தனியாக செல்பவர்களிடம் செல்போன், நகை ஆகியவற்றை பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்தது.
மதுரவாயலும் வழிபறி சம்பவங்களும்..
மதுரவாயல் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்களை மதுரவாயல் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். சம்பவங்கள் நடந்த இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து அம்பத்தூரை சேர்ந்த மணிகண்டன் (23), யுவராஜ் (20), கார்த்திக் (20) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரவாயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இரவில் தனியாக செல்பவர்களைக் குறிவைத்து தாக்கி, அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடம் இருந்த 4 1/2 பவுன் நகை மற்றும் ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மூவரும் ஏற்கனவே பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க:கடனை கட்ட முடியமால் உணவகம் நடத்திவந்த பெண் தற்கொலை!