ETV Bharat / state

சென்னையில் மந்திரவாதி கத்தியால் குத்தி கொலை.. நடந்தது என்ன? - மந்திரவாதி கொலை வழக்கு

சென்னையில் வீட்டில் இருந்த மந்திரவாதியை கத்தியால் குத்திக் கொலை செய்த நண்பர்கள் மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 14, 2023, 10:04 PM IST

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சையது சிகந்தர் என்பவர் திருமங்கலம் காந்தி நகரில் கடந்த மூன்று ஆண்டுகளாக வசித்து வந்தார். இவர் உடல் நலம் பாதித்தவர்களுக்கு மந்திரிப்பது, தாயத்து கட்டுவது, செய்வினை வைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று (ஜூலை 13) சையது சிக்கந்தர் தங்கியிருந்த வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக திருமங்கலம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சையது சிகந்தரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், காந்தி நகரைச் சேர்ந்த விக்கி சுப்பிரமணியன், மற்றொரு விக்கி, புருஷோத்தமன் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, விக்கி சுப்பிரமணியனும், இறந்துப்போன சையது சிக்கந்தரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். மேலும் விக்கி சுப்பிரமணியன் கேட்ட அனைத்தையும் சையது சிக்கந்தர் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விக்கி சுப்பிரமணியன், சையது சிக்கந்தரை விலக ஆரம்பித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சையது சிக்கந்தர் இது குறித்து விக்கி சுப்பிரமணியத்தின் தாயிடம் பல முறை முறையிட்டுள்ளார். அப்போது அவர் முறையிடுவதை கண்ட விக்கி சுப்பிரமணியத்தின் தந்தை, தனது மனைவிக்கும், சையது சிக்கந்தருக்கு தவறான உறவு இருப்பதாக நினைத்து கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு விக்கி சுப்பிரமணியத்தின் தந்தை இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சையது சித்தர் தனது நண்பர் ஜான்பாஷாவுடன் இணைந்து விக்கி சுப்பிரமணியத்தின் தந்தையை தாக்கி உள்ளனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜான்பாஷாவை கைது செய்த நிலையில், சையது சிக்கந்தர் முன் ஜாமீன் வாங்கி கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்தார். இந்நிலையில் விக்கி சுப்பிரமணியன் அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் மற்றும் விக்கி ஆகியோருடன் இணைந்து கஞ்சாவுக்கு அடிமையாகி கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சையது சிகந்தர் புருஷொத்தமனிடம் சென்று விக்கி சுப்பிரமணியன் தன்னை விட்டு பிரிந்ததற்கு காரணம் நீ தான் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த மோதல் தொடர்பாக புருஷோத்தமன், விக்கி சுப்பிரமணியத்திடம் தெரிவித்துள்ளார். மேலும், சையது சிகந்தர், விக்கி சுப்பிரமணியத்தின் தாயார் குறித்தும் அவர் அவதூறாக பேசியதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விக்கி சுப்பிரமணியன், சையது சிகந்தரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் விக்கி சுப்பிரமணியன், புருஷோத்தமன் மற்றும் விக்கி ஆகிய மூவரும் இணைந்து சையது சிகந்தர் வீட்டிற்குச் சென்று கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே கொலை செய்த விக்கி சுப்பிரமணியன் மற்றும் புருஷோத்தமன் ஆகிய இருவரும் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். மேலும் மற்றொரு விக்கியை திருமங்கலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: Chennai Crime News: சென்னை மாநகரில் இன்று நடந்த குற்றச் சம்பவங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.