ETV Bharat / state

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: 38,799 பேர் பயன்! - makkalai thedi maruthuvam daily report

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கிய நாள் முதல் இதுவரை 38,799 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

smedic
மக்களைத் தேடி மருத்துவம்
author img

By

Published : Aug 11, 2021, 6:12 AM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற மகத்தான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் 05.08.2021 அன்று துவக்கி வைத்தார்.

இத்திட்ட துவக்க விழா நிகழ்விடத்திலிருந்து மதுரை, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் நேரடி ஒளிபரப்பு வழியாக தொடங்கப்பட்டது.

இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அரசு முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, தேசிய நலவாழ்வு குழுமம், திட்ட இயக்குநர் - தமிழ்நாடு சுகாதார மறு சீரமைப்பு திட்டம், மாவட்ட ஆட்சியர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று தொற்று நோய்களுக்கான மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

மேலும் மற்றொரு நோயாளியின் வீட்டிற்குச் சென்று அவருக்குத் தேவையான இயன் முறை சிகிச்சை சேவையினை பார்வையிட்டு ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து, நோயாளிகளின் வீட்டிற்கே சென்று சேவை அளிப்பதற்கான வாகனங்களை இத்திட்டத்தின் கீழ் துவக்கி வைத்தார்.

இத்திட்டமானது அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் உள்ள 50 ஊரக வட்டாரங்களிலுள்ள 1172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேன்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டது.

மேலும் 3 மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி) தலா ஒரு மண்டலத்திலுள்ள 106 பகுதி சுகாதார நிலையத்திலும் மற்றும் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக தமிழ்நாடு மகளிர் கழக மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 1264 பெண் சுகாதாரத் தன்னார்வலர்களும், 50 இயன் முறை மருத்துவர்களும், 50 நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்களும், இல்லம் தேடி வரும் சேவையில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த திட்டம், படிப்படியாக இந்தாண்டு இறுதிக்குள், மாநிலத்தின் பிற கிராமப்பகுதிகளில் 385 வட்டாரங்களிலுள்ள 8713 துணை சுகாதார நிலையங்கள் வழியாக மக்களை சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படும்.

இப்பணியில் 8713 பெண் சுகாதார தன்னார்வலர்களும் 385 இயன்முறை மருத்துவர்களும், 385 நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்களும், இல்லம் தேடி வரும் சேவையில் ஈடுப்படுத்தப்படுவார்கள்.

நகர்ப் புறப்பகுதிகளில் 460 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் வழியாக மக்களை சென்றடையும் வகையில் இத்திட்டம் உரிய பணியாளர்களுடன் விரிவுப்படுத்தப்படும்.

இத்திட்டத்தினை ஊரக மற்றும் நகர்புறங்களில் செயல்படுத்துவதற்காக ரூபாய் 258 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு (அரசாணை எண் 340 தேதி 03.08.2021) அரசாணை பெறப்பட்டுள்ளது.

இத்திட்டம் துவங்கப்பட்டு இதுவரை நீரிழிவு நோய் உள்ள 11,247 நபர்களுக்கும், உயர் இரத்த அழுத்த நோய் உள்ள 17,442 நபர்களுக்கும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோய் உள்ள 7,831 நபர்களுக்கும் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.

மேலும் 1147 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும், 1118 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. இதை தவீர்த்து 14 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகள் வழங்கப்பட்டன. ஆக மொத்தம் 38,799 பயனாளிகள் இத் திட்டத்தினால் பயனடைந்துள்ளார்கள்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நெல்லை கண்ணனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டிய திமுகவினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.