சென்னை: தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக இத்திட்டத்தினை 20 லட்சம் பேரில் தொடங்கி, தொடர்ந்து 1 கோடி பேர்வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவமனைகளிலும் நீரிழிவு , சர்க்கரை நோய், புற்றுநோய், காச நோய் , சிறுநீரக சிகிச்சை முடக்குவாதம், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு வந்து மருந்து மாத்திரைகளை வாங்கி செல்கின்றனர். எனவே அவர்களின் வீடுகளுக்கு சென்றே மருந்து வழங்கும் திட்டத்தை அரசு துவக்கி உள்ளது.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நேற்று (ஆகஸ்ட் 7) வரையில், 25 ஆயிரத்து 617 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 214 நபர்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1525 நபர்களும், மிகக்குறைவாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 206 நபர்கள் பயனடைந்துள்ளதாக குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கோவாக்சின், கோவிஷீல்டு கலவை - நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது'