ETV Bharat / state

சுமார் ரூ.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் அரிசி கடத்தல் - 184 பேர் கைது - ரேஷன் அரிசி கடத்தியவர்கள் கைது

தமிழ்நாட்டில் இதுவரை 10லட்சத்து 27ஆயிரத்து 440 ரூபாய் மதிப்புள்ள ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற 184 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Etv Bharatரேஷன் அரிசி கடத்தல்
Etv Bharatரேஷன் அரிசி கடத்தல்
author img

By

Published : Sep 21, 2022, 11:02 PM IST

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பொதுமக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம், சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.

அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீது இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் படி வழக்குப்பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச்சட்டம் 1980இன் படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த செப்.12ஆம் தேதி முதல் செப்.18ஆம் தேதி வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற பத்து லட்சத்து இருபத்து ஏழாயிரத்து நானூற்று நாற்பது ரூபாய் மதிப்புள்ள, ஆயிரத்து 818 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசியும், அக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 52 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன. அக்குற்றச்செயலில் ஈடுபட்ட 184 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்'எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பர்ஸ் திருட்டு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.