ETV Bharat / state

குஜாத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். தினேஷ் குண்டு ராவ் கேள்வி - Dinesh Kundu Rao

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குஜராத் அரசு எதன் அடிப்படையில் விடுதலை செய்தது என தெரியவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சட்டத்தின்படி வெளிவர முடியாது.. ஆனால் குஜராத் அரசு.. தினேஷ் குண்டு ராவ் கேள்வி

author img

By

Published : Aug 18, 2022, 1:13 PM IST

சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தலைமையில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் பாதயாத்திரை நடைபெற உள்ளது. இது தமிழ்நாட்டில் தொடங்க இருப்பதால், இதற்கான பயண திட்டமிடல் குறித்து பல்வேறு மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, மாநில செயலாளர், மாவட்ட தலைவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் குண்டு ராவ், “ராகுல் காந்தி தலைமையில் பாதயாத்திரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ளது. இந்த பேரணியானது 7ஆம் தேதி தமிழ்நாட்டில் தொடங்க உள்ளது. இந்த பேரணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இதற்காக நான்கு நாட்கள் தமிழ்நாட்டிற்கு ராகுல் காந்தி வர இருக்கிறார். இந்த பாதயாத்திரை தமிழ்நாட்டில் 59 கிலோமீட்டர் நடைபெற உள்ளது அதற்கு பின்பு கேரளாவுக்குச் சென்று மீண்டும் தமிழ்நாடு - கேரள எல்லையான பாலக்காட்டிற்கு வர உள்ளார்கள். அங்கு வந்து மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பேரணி நடைபெற உள்ளது.

கூட்டணி கட்சிகளை அழைப்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும். கண்டிப்பாக கூட்டணி கட்சிகளை அழைப்போம். இருப்பினும் இறுதியில்தான் அவை முடிவு செய்யப்படும். பிரதமர் மோடி சொல்வது ஒன்று; செய்வது ஒன்று. சுதந்திர தின விழா அன்று பிரதமர் பெண்கள் பாதுகாப்பு குறித்து உரையாற்றினார்.

ஆனால் குஜராத் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை அனுபவித்து வந்தவர்கள் விடுதலை ஆகியுள்ளனர். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சட்டத்தின்படி வெளியில் வர முடியாது.

ஆனால் குஜராத் மாநில அரசு எந்த அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது என்று தெரியவில்லை. இதிலிருந்து தெரிகிறது பிரதமர் போலியாக நடித்து வருகிறார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இஸ்லாமியப்பெண்மணி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகளையும் விடுவித்தது குஜராத் அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.