தமிழ்நாட்டில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதிப் பெற்றவர்களாக உள்ளனர். இந்தத் தேர்தலில் இதற்காக அனுமதி வழங்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காகப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் 12 லட்சத்து 91 ஆயிரத்து 132 பேர் 80 வயதுக்கு மேற்பட்டோர் உள்ளனர்.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் ஒரு லட்சத்து எட்டாயிரத்து 718 பேர் இடம்பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் எட்டாயிரத்து 253 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தலில் முதல்முறையாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் மூலம் வாக்குப்பதிவு செய்யும் செயல்முறை வசதியை ஏற்படுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வாக்காளர்கள் தாங்கள் செலுத்திய வாக்கின் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த காணொலி பதிவுசெய்யப்பட்டு உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் அஞ்சல் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அஞ்சல் வாக்குகள் மாவட்ட வாரியாக
திருவள்ளூர் - 56,074
சென்னை - 1,08,718
காஞ்சிபுரம் - 25,666
வேலூர் - 24,487
கிருஷ்ணகிரி - 28,502
தர்மபுரி - 23,567
திருவண்ணாமலை - 48,300
விழுப்புரம் - 33,913
சேலம் - 61,728
நாமக்கல் - 34,701
ஈரோடு - 49,639
நீலகிரி - 8,253
கோயம்புத்தூர் - 64,755
திண்டுக்கல் -36,800
கரூர் - 17,528
திருச்சி - 54,155
பெரம்பலூர் - 11,295
கடலூர் - 40,203
நாகப்பட்டினம் -26,635
திருவாரூர் - 19,326
தஞ்சாவூர் - 45,012
புதுக்கோட்டை - 26,616
சிவகங்கை - 28,855
மதுரை - 46,790
தேனி - 22,614
விருதுநகர் - 28,092
ராமநாதபுரம் - 20,972
தூத்துக்குடி - 29,511
திருநெல்வேலி - 36,700
கன்னியாகுமரி - 28,030
அரியலூர் - 11,390
திருப்பூர் - 61,272
கள்ளக்குறிச்சி - 17,760
தென்காசி -30,980
செங்கல்பட்டு - 49,134
திருப்பத்தூர் - 14,717
ராணிப்பேட்டை - 19,442