ETV Bharat / state

விசிக சார்பில் 10 லட்ச ரூபாய் கரோனா நிவாரண நிதி - விசிக சார்பில் 10 லட்ச ரூபாய் கரோனா நிவாரண நிதி

கரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்குவோம் என விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.

தொல் திருமாவளவன்
author img

By

Published : May 13, 2021, 5:57 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும் தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன் தினம் (மே.11) வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனடிப்படையில், அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் எனப் பலரும் நிதி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை, மாநிலங்களை உறுப்பினர்கள் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல் திருமாவளவன்
முதலமைச்சர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் தொல் திருமாவளவன்

இது குறித்து ட்வீட் செய்துள்ள அக்கட்சியின் தலைவர். தொல். திருமாவளவன், “கரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்குவோம். முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு விசிகவின் இரண்டு எம்பிக்கள் நான்கு எம்எல்ஏக்களின் சார்பில் 10 ரூபாய் லட்சம் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொல் திருமாவளவன் ட்வீட்
தொல் திருமாவளவன் ட்வீட்

இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதி: திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.