ETV Bharat / state

'இது இரண்டு ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றி..!' - நடிகர் கார்த்தி - நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியைச் சேர்ந்த கார்த்தி அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

’இது இரண்டு வருட சட்டப் போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி..!’ - நடிகர் கார்த்தி

author img

By

Published : Mar 20, 2022, 10:25 PM IST

சென்னை: 'நடிகர் சங்க கட்டடத்தை விரைவாகக் கட்டி முடிப்பது எங்கள் பணி' என தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் பதவிக்குப்போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தலைவர், பொருளாளர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றதையடுத்து இன்று(மார்ச் 20) வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பாண்டவர் அணி மாபெரும் வெற்றி

தேர்தலில் போட்டியிட்ட பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணி இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், பாண்டவர் அணி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. தலைவர் பதவிக்கு நடிகர் நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால், பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் அதிகாரப்பூர்வமாக வெற்றிபெற்று தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் கார்த்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, "2015இல் இருந்து 2019 வரை நடிகர் சங்க வரலாற்றில் முக்கியமான நாட்கள். எங்கள் குழு சொந்த வாழ்க்கை நேரத்தை தியாகம் செய்து சங்கத்திற்காக உழைத்தார்கள். இப்போது கிடைத்துள்ள வெற்றி 2 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள வெற்றி. நடிகர் சங்க கட்டடத்தை விரைவாக கட்டி முடிப்பது எங்கள் பணி.

எங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும். மேலும், நாளை முதலமைச்சரை சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நிறைய நிதிச் சிக்கல் உள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக சரி செய்வோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பதவிகள் அனைத்தும் பாண்டவர் அணிக்கே - வெளியானது நடிகர் சங்கத்தேர்தல் முடிவுகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.