ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாகவுள்ள 9 கூடுதல் நீதிபதிகளின் பின்புலம் இதுதான்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்க உள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாகவுள்ள 9 கூடுதல் நீதிபதிகளின் பின்புலம் இதுதான்!

author img

By

Published : Jun 3, 2022, 7:58 PM IST

சென்னை: கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார், கே. முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் பதவியேற்றனர். இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம், குடியரசு தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது.

இதனையடுத்து குடியரசு தலைவர் இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான உத்தரவை அண்மையில் பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நூலக கூட்ட அரங்கில் நாளை (ஜூன் 4) நடைபெறும் நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, இந்த நிரந்தர நீதிபதிகள் 9 பேருக்கும் பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து, இவர்களை வரவேற்று தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் வாழ்த்துரை வழங்கவுள்ளார். இதில், நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க உள்ள நீதிபதிகள் முரளிசங்கர் - தமிழ்ச்செல்வி ஆகியோர் கணவன் – மனைவி ஆவார்கள். மேலும்,

  1. ஜி.சந்திரசேகரன் - 1962ஆம் ஆண்டு மே 31இல் பிறந்தார். 1991ஆம் ஆண்டு ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டார்.பின்னர் சேலம், ஸ்ரீவில்லிபுத்தூர், கோயம்புத்தூர், முசிறி, காரைக்குடி, திருச்சி, நாமக்கல், சென்னை, பொள்ளாச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
  2. வி.சிவஞானம் - 1963ஆம் ஆண்டு ஜனவரி 1இல் பிறந்தார். 1991ஆம் ஆண்டு ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டார். மயிலாடுதுறை, கும்பகோணம், ஈரோடு, நாமக்கல், பவானி, துறையூர், அரியலூர், கடலூர், பண்ருட்டி, பெரம்பலூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
  3. ஜி.இளங்கோவன் - 1963ஆம் ஆண்டு ஜூன் 6இல் பிறந்தார். 1991ஆம் ஆண்டு ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டார். கோயம்புத்தூர், தூத்துக்குடி, சிவகங்கை, திருமங்கலம், மதுரை, உத்தமபாளையம், குளித்தலை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
  4. எஸ்.ஆனந்தி - 1960ஆம் ஆண்டு ஜூலை 31இல் பிறந்தார். 1991ஆம் ஆண்டு ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டார். செங்கல்பட்டு, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, சிவகங்கை, நாமக்கல், திண்டுக்கல், சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
  5. எஸ்.கண்ணம்மாள் - 1960ஆம் ஆண்டு ஜூலை 20இல் பிறந்தார். 1991ஆம் ஆண்டு ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி, உடுமலைப்பேட்டை, சங்ககிரி, கோவில்பட்டி, திருநெல்வேலி, மேலூர், தஞ்சாவூர், திருச்சி, திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
  6. எஸ்.சதிக்குமார் - 1963ஆம் ஆண்டு ஜூலை 18இல் பிறந்தார். 1994ஆம் ஆண்டு நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டார். சிவகங்கை, திருவொற்றியூர், சேலம், கள்ளக்குறிச்சி, பொன்னேரி, செஞ்சி, பவானி, சென்னை, அரூர் உள்ளிட்ட இடங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
  7. கே.முரளி சங்கர் - 1968ஆம் ஆண்டு மே 31இல் பிறந்தார். 1995ஆம் ஆண்டு நவம்பரில் நீதித்துறைக்குத் தேர்வு செய்யப்பட்டார். கும்பகோணம், கோயம்புத்தூர், சேலம், சங்ககிரி, பாபநாசம், கொடுமுடி, தாராபுரம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
  8. செல்வி ஆர்.என்.மஞ்சுளா - 1964ஆம் ஆண்டு பிப்ரவரி 16இல் பிறந்தார். 1995ஆம் ஆண்டு நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டார். திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாங்குநேரி, கோவில்பட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
  9. டி.வி.தமிழ்ச்செல்வி - 1968ஆம் ஆண்டு ஜூன் 19இல் பிறந்தார். 1995ஆம் ஆண்டு நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டார். ஈரோடு, கோயம்புத்தூர், தஞ்சாவூர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க உள்ள இவர்கள் 9 பேரும் மாவட்ட நீதிபதிகளாக இருந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள். மேலும், நாளை (ஜூன் 04) பதவியேற்க உள்ள நீதிபதிகள் எஸ்.ஆனந்தி மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடுத்த மாதம் பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராக 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.