ETV Bharat / state

தனியார் பள்ளி வாகனங்களில் இது நம்ம சென்னை, நம்ம செஸ் ஸ்டிக்கர் - Chess Olympiad

தமிழ்நாட்டில் ஓடும் தனியார் பள்ளி வாகனங்களில் இது நம்ம சென்னை, நம்ம செஸ் என்று பெரிய விளம்பர ஸ்டிக்கரை ஒட்டச் சொல்லி ஆர்டிஓக்கள் மூலம் வற்புறுத்துகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளி நிர்வாகிகள் சொந்த செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நமது சென்னை, நமது செஸ் என பெரிய ஸ்டிக்கர் ஒட்டச்சொல்லி ஆர்டிஓக்கள் வற்புறுத்தல்

author img

By

Published : Jul 7, 2022, 6:38 PM IST

சென்னை: தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக காலையிலும், மாலையிலும் குழந்தைகளை அழைத்து வர வைத்துள்ள வாகனங்களில் பள்ளியின் பெயரை முழுவதும் மறைத்து, மூன்று பக்கமும் பள்ளி நிர்வாகிகள் சொந்த செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நமது சென்னை, நமது செஸ் என பெரிய ஸ்டிக்கர் ஒட்டச்சொல்லி ஆர்டிஓக்கள் வற்புறுத்துகின்றனர்.

பள்ளி வாகனங்கள் எல்லாம் மஞ்சள் கலரில் உள்ளதால் எந்தப் பள்ளி வாகனம் என்பது தெரியாமல் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவே அதனை உடனே தடுத்து நிறுத்திட வேண்டும். அரசு பஸ்களில் விளம்பரம் செய்தால் சரியாக இருக்கும்.

நம்ம செஸ் ஸ்டிக்கர்
நம்ம செஸ் ஸ்டிக்கர்

மேலும் சென்ற வாரம் கரூரில் நடைபெற்ற அரசு விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வந்தபோது அனைத்து தனியார் பள்ளிகளிலும் உள்ள பள்ளி வாகனங்களையும் சொந்த செலவில் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தனர். கோயம்புத்தூருக்கு வரும்போது, சொந்த செலவில் டீசல் போட்டு வாகனங்களை அவர்கள் சொல்கிற இடத்திலிருந்து இயக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.

பள்ளி வேலை நாளில் எப்படி பள்ளி வாகனங்களை அனுப்ப முடியும். பெற்றோர்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு சுயவிளம்பரம் பிடிக்காது என்பதால், தனியார் பள்ளி வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டச் சொல்வதை நிறுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் அதிமுக அடித்த கொள்ளையை ஒரே ஆண்டில் அடித்து திமுக சாதனை - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.