ETV Bharat / state

திருவேற்காட்டில் டிராக்டர் திருடர்கள் கைது!

சென்னை: திருவேற்காடு அருகே டிராக்டரை திருடிய இரண்டு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிராக்டர்
author img

By

Published : May 5, 2019, 11:21 PM IST

திருவேற்காடு, நடேசன் நகரை சேர்ந்தவர் வாசுதேவன்(49). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்துக்கொண்டு திருவேற்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு டிராக்டரை வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். மீண்டும் காலை எழுந்துவந்து பார்த்தபோது அங்கு டிராக்டரை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைத்தார்.

இதுகுறித்து திருவேற்காடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி காட்சிகள்

இதில், இரவு நேரத்தில் காரிலிருந்து ஒருவர் இறங்கி சென்று தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிந்த டிராக்டரை கள்ள சாவி போட்டு ஓட்டி செல்வதும் அதன்பிறகு மற்றொரு நபர் காரில் பின் தொடர்ந்து செல்வது போல் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அந்த காரின் நம்பரை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், திருவேற்காடு காமதேனு நகரை சேர்ந்த ஐயப்பன் (41), விக்னேஷ்(21), ஆகியோர் டிராக்டரை திருடிச்சென்றது தெரியவந்தது. பின்னர், இருவரையும் பிடித்து விசாரித்ததில் டிராக்டரை திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து, ஐயப்பனையும், விக்னேஷையும் கைது செய்த காவல்துறையினர் இதுபோன்று வேறு எதாவது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவேற்காடு, நடேசன் நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன்(49), இவர் சொந்தமாக டிராக்டர் வைத்துக்கொண்டு திருவேற்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு டிராக்டரை வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி விட்டு சென்று விட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது டிராக்டர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருவேற்காடு போலீசில் புகார் அளித்தார் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர் அப்போது இரவு நேரத்தில் காரில் வரும் இரண்டு பேரில் ஒருவர் இறங்கி சென்று தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் டிராக்டரை கள்ள சாவி போட்டு ஓட்டி செல்வதும் அதன்பிறகு மற்றொரு நபர் காரில் பின் தொடர்ந்து செல்வது போல் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் விசாரணை செய்தபோது திருவேற்காடு காமதேனு நகரைச் சேர்ந்த ஐயப்பன்(41), விக்னேஷ்(21), ஆகியோர் டிராக்டரை திருடிச்சென்றது தெரியவந்தது இருவரையும் பிடித்து விசாரித்தபோது டிராக்டரை திருடியதை ஒப்புக்கொண்டனர். ஐயப்பன் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருவதால் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க விக்னேசை காரில் பயணியைப் போல் ஏற்றிக்கொண்டு வலம் வந்து திருவேற்காட்டில் தனியாக நின்று கொண்டிருந்த டிராக்டரை திருடிச் சென்று  அருகில் உள்ள ஏரி பகுதியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த டிராக்டர் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். ஐயப்பன் மற்றும் விக்னேஷ் இருவரையும் கைது செய்து இவர்கள் இதுபோல் வேறு எங்காவது திருட்டு சம்பவங்களில் ஈடுபடுள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். கண்காணிப்பு கேமரா உதவியால் 24 மணி நேரத்தில் டிராக்டரை திருடிய நபர்களை போலீசார் கண்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.