ETV Bharat / state

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் உதவி பேராசிரியராவதில் சிக்கல் - cm stalin

திருவள்ளுவர் பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர்கள் நிரந்தர உதவி பேராசிரியராவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறி யு.ஜி.சி தகுதி கெளரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் உதவி பேராசிரியராவதில் சிக்கல்

author img

By

Published : Jun 17, 2021, 9:07 PM IST

சென்னை: தமிழ்நாடு அனைத்து அரசுக்கல்லூரி யு.ஜி.சி தகுதி கெளரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், " மாநிலம் முழுவதும் 149 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

அதில் சுமார் 10 ஆண்டிற்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம். 108 கல்லூரிகள் ஏற்கனவே அரசு கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. 41 கல்லூரிகள் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதில் வேலூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட ஆறு உறுப்பு கல்லூரிகளும், இதனைத் தவிர்த்து இதே பல்கலைக்கழகத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு முதுநிலை விரிவாக்க மைய கல்லூரியும் அடங்கும்.

திருவெண்ணை நல்லூரில் 60 நபர்களும், தென்னாங்கூரில் 27 நபர்களும், திருப்பத்தூரில் 33 நபர்களும், திட்டக்குடியில் 31 நபர்களும், கள்ளக்குறிச்சியில் 27 நபர்களும், அரக்கோணத்தில் 28 நபர்களும் என மொத்தம் 206 நபர்கள் கெளரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். மேலும் முதுநிலை விரிவாக்க மையத்தில் 25 நபர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்தக் கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு 2020-ஆம் ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய ஐந்து மாதங்களுக்குக் கரோனா ஊரடங்கு காலத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த ஐந்து மாதம் ஊதியம் வழங்கப்படாததால் அந்தந்த கல்லூரிகளில் யு.ஜி.சி தகுதியுடன் (நெட்/செட்/பி.எச்.டி.) பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்கள் பணி அனுபவம் சான்று பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பொழுது 10 மாதங்கள் ஊதியம் பெற்றிருந்தால் மட்டுமே ஒரு வருடமாக கணக்கில் கொள்ளப்பட வேண்டுமென தமிழ்நாடு உயர்கல்வித்துறை 8.7.2016 ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட ஆறு கல்லூரிகள் மற்றும் முதுநிலை விரிவாக்க மையத்தில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு உதவிப் பேராசிரியர் நியமனத்தின் போது ஓராண்டுக்கான பணி அனுபவ மதிப்பெண் கிடைக்காதபட்சத்தில் அவர்கள் உதவிப்பேராசியராகும் கனவு கேள்விக்குறியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் அப்போதைய பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வித்துறை அலுவலர்கள் செவிசாய்க்கவில்லை. எனவே திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசுடைமையாக்கப்பட்ட ஆறு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மைய கல்லூரியில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதார கோரிக்கையினை பரிசீலிக்க வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடியுடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.