தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு கறுப்பு மை பூசியும் சாணத்தை வீசியும் சென்றுள்ளனர் சமூகவிரோத கும்பல். இத்தனை நாள்களாக அரசியல் தலைவர்களின் சிலைக்கு ஏற்பட்டுவந்த அவமரியாதை, இன்று திருவள்ளுவருக்கு ஏற்பட்டுள்ளது தமிழ்நாடு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு செய்யப்பட்ட அவமரியாதை சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.
- இதுகுறித்து வைகோ வெளியிட்ட கண்டனப் பதிவில், திருக்குறள் நெறியை இந்துத்துவ சிமிழுக்குள் அடக்க நினைக்கும் மதவாத சனாதன சக்திகளின் இதுபோன்ற பண்பாடற்ற செயல்பாடுகளை பாஜக நிறுத்தாவிடில், தமிழ்நாடு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசிய பாஜகவினர் என விமர்சித்துள்ளார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறியுள்ளார்.
- "கிராமம் என்பதால் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்படக் காரணமான விஷமிகளை உடனே கண்டறியலாம். திருவள்ளுவர் சிலையை அவமதித்த விஷமிகளை உடனே கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறினார்.
- டிடிவி தினகரன் கூறுகையில், தமிழ், தமிழினம் எல்லைகளைக் கடந்து போற்றப்படுபவர் திருவள்ளுவர். வள்ளுவரின் சொந்த மண்ணிலேயே அவரை வைத்து நடக்கும் சர்ச்சைகளும் இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்ற, தவிர்க்கப்பட வேண்டியவை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆழ்துளைக் கிணறு விபத்துகள் என்று தணியுமோ! - ஹரியானாவில் சிறுமி மரணம்
Intro:Body:
இந்தித் திணிப்பு; திருவள்ளுவருக்கு மதச் சாயம்!
தமிழக மக்களைக் கொதித்து எழச் செய்யும்
வைகோ எச்சரிக்கை
சென்னையில் சாலை விதிகளை மீறுவோருக்கு, போக்குவரத்துக் கhவல்துறை வழங்கும்
ரசீதுகளில் இந்தி, ஆங்கில மொழி மட்டுமே இடம் பெற்று இருக்கிறது.
இந்தி மொழி இடம் பெற்ற அபராத ரசீதுகளை மத்திய அரசின் தேசிய தகவல் மையம்
வடிவமைத்து, அதனை தமிழகத்தில் பயன்படுத்திட உத்தரவிடப்பட்டிருக்கிறது. மத்திய பா.ஜ.க.
அரசின் இந்தித் திணிப்புக்கு அ.இ.அ.தி.மு.க. அரசும் துணையாக இருக்கிறது.
முற்றிலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு அபராத ரசீதுகளைத் தயாரித்து இருப்பது கடும்
கண்டனத்துக்கு உரியதாகும். தமிழக மக்கள் இச்செயலை மன்னிக்கவே மாட்டார்கள்.
பிரதமர் மோடி, அவ்வப்போது தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றிக் கொண்டே
இருக்கும்போது, இன்னொரு பக்கத்தில் தமிழ் மொழியை அழிக்கும் செயலில் பா.ஜ.க அரசு
ஈடுபட்டு இருப்பதன் மூலம் பா.ஜ.க. வின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
கடந்த செப்டம்பர் 14 இல் இந்தி நாளில், இந்திதான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும்
என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொக்கரித்திருந்தார்.
இத்தகைய சூழலில், தமிழக அரசு இந்தியை நடைமுறைப்படுத்தத் தீவிரம் கhட்டும் செயல் தமிழ்
நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும். எனவே
தமிழக அரசு இந்தித் திணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற மனிதத் தத்துவத்தை
நிலைநாட்டிய திருக்குறள், உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. நாடு, மொழி, இன, மத
வேறுபாடுகள் இன்றி அனைவரும் பின்பற்றக் கூடிய வாழ்வியல் நெறியை போதிப்பதால்தான்
திருக்குறள் மனித சமூகத்தின் வழிகhட்டும் நூலாகத் திகழ்கின்றது.
லத்தீன், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு திருக்குறளுக்குத்தான் இருக்கிறது. எனவேதான் “வள்ளுவன்
தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று மகhகவி பாரதி
பொருத்தமாகப் பாடினார்.
அத்தகைய திருக்குறளைத் தந்த ‘செந்நாப் போதார்’ திருவள்ளுவருக்குக் கhவி உடை அணிவித்து,
மதச் சாயத்தைப் பூசி பா.ஜ.க. டிவிட்டரில் படம் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரிய
செயலாகும்.
திருக்குறள் நெறியை இந்துத்துவ ‘சிமிழுக்குள்’ அடக்க நினைக்கும் மதவாத சனாதன சக்திகளின்
இதுபோன்ற பண்பாடற்ற செயல்பாடுகளை பா.ஜ.க. நிறுத்தாவிடில், தமிழக மக்கள் மென்மேலும்
கோபாவேசமாய் கொதித்து எழுந்து தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று என்று
தெரிவித்துக்கொள்கின்றேன்.
------
*⭕⭕ வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம்*
தஞ்சாவூர்: வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கிராமம் என்பதால் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட காரணமாக விஷமிகளை உடனே கண்டறியலாம் என பெ.மணியரசன் கூறியுள்ளார். திருவள்ளுவர் சிலையை அவமதித்த விஷமிகளை உடனே கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெ.மணியரசன் கூறினார்.
*⭕⭕ஊடகதளம்*
**************
*⭕⭕ திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசிய பாரதிய ஜனதா கட்சியினர்: முத்தரசன் கண்டனம்*
சென்னை: திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசி பாரதிய ஜனதா கட்சியினர் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளனர் என முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாவினர் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என ரவிக்குமார் வி.சி.க. கூறியுள்ளார்.
*⭕⭕ஊடகதளம்*
***************
*⭕⭕ திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கும் தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது: பாலகிருஷ்ணன் கண்டனம்*
சென்னை: திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கும்
தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் சிலை அவமதித்தவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
*⭕⭕ஊடகதளம்*
**************
*⭕⭕ வள்ளுவரை அவமதிப்புச் செய்தது கண்டனத்திற்குரியது: கொளத்தூர் மணி*
சென்னை: உலக மக்களுக்கு பொதுவான வழிகாட்டியான வள்ளுவரை அவமதிப்புச் செய்தது கண்டனத்திற்குரியது என கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் தழுவிய போராட்டமாக வெடிக்கும் என மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
*⭕⭕ஊடகதளம்*
*************
*⭕⭕தஞ்சாவூர், பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.*
*⭕⭕இதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.*
*⭕⭕உலகப்பொதுமறை என கொண்டாடப்படும் திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர், சாதி- மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவானவர்.*
*⭕⭕தமிழ், தமிழினம் என்ற எல்லைகளைத் தாண்டி அவர் போற்றப்படுகிறார்.*
*⭕⭕வள்ளுவரின் சொந்த மண்ணான தமிழகத்தில் அவரை வைத்து நடக்கும் சர்ச்சைகளும், இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்றவை; தவிர்க்கப்பட வேண்டியவை.*
*டிடிவி தினகரன்*
*⭕⭕ஊடகதளம்*
***************
Conclusion: