ETV Bharat / state

'நாட்டில் பல பிரச்னைகள் இருக்கு, ரஜினி பிரச்னையைப் பத்தி மேலும் பேசாதீங்க' - கடுப்பான திருநாவுக்கரசர்

சென்னை: விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி

author img

By

Published : Jan 22, 2020, 1:25 PM IST

சென்னை விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் '1971ஆம் ஆண்டு நடந்த பேரணி தொடர்பாக பல கருத்துகள் வந்துகொண்டிருக்கிறது. இந்தச் சம்பவம் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும் இதனை நேரில் பார்த்த யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அனைவரும் தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் பேசிக்கொண்டு வருகின்றனர்.

1971இல் நடந்த பேரணி குறித்து மக்களுக்கு இருதரப்பு கருத்துகளும் சென்றுள்ளது. இதில் உண்மையானவை எது? என மக்கள் நன்றாக அறிவார்கள்.

நாட்டில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதனால் இந்த பிரச்னை மேலும் பூதாகரமாக வளர வேண்டாம் என்பதே தன்னுடைய கருத்து.

திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினியின் கருத்துக்கு நண்பன் என்கிற முறையில் பல ஆலோசனை கூறியுள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரிப்பதால் அனைத்திலும் அதிகளவில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் ஆந்திராவின் முதலமைச்சர் ஜெகன் மோகன் அவர்கள் மூன்று தலைநகரங்கள் அமைக்க புதிய முயற்சி மேற்கொண்டுள்ளாரோ அதே மாதிரி, தமிழ்நாட்டின் இதயமாக மத்தியில் உள்ள திருச்சியை விரிவுபடுத்தி இரண்டாவது தலைநகரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்க முயற்சி செய்வோம்' எனத் தெரிவித்தார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி

மேலும் அவர் 'ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக்கூடாது. பாண்டிச்சேரி அரசு நடைமுறைப்படுத்தாமல் இருப்பதைப்போல மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்க வேண்டும். தஞ்சாவூர் பெரிய கோயிலில் தமிழ் வழிபாட்டு முறையில் குடமுழுக்கு நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

Intro:சென்னை விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டிBody:சென்னை விமான நிலையத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி

ரஜினிகாந்த் குறித்த கருத்துக்கும்,1971 ல் நடந்த பேரணி தொடர்பாக பல கருத்துகள் வந்துகொண்டிருக்கிறது.50 வருடத்திற்கு பின்பு இதனை நேரில் பார்த்த யாரும் இதுவரை கருத்தை தெரிவிக்கவில்லை.எல்லோரும் கிடைத்த தகவலின் அடிப்படையில் பேசிகொண்டு வருகின்றனர் .

1971ல் நடந்த பேரணி குறித்து மக்களுக்கு இருதரப்பு கருத்துகளும் சென்றுள்ளது.

நாட்டில் பல பிரச்சனை உள்ளது.இது மேலும் வளர வேண்டாம் என்பதே என்னுடைய கருத்தாக இருக்கும்..

ஸ்டாலின் அவர்கள் ரஜினியின் கருத்துக்கு நண்பன் என்ற முறையில் ஆலோசனை கூறியுள்ளார்

சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை மற்றும் எல்லாவற்றிலும் அதிகளவில் உள்ளது எனவே மத்தியில் இருக்க கூடிய திருச்சியை விரிவுப்படுத்தி இரண்டாவது தலைநகரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்க முயற்சி செய்வோம் என தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கூடாது.பாண்டிச்சேரி அரசு நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை போல மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்க வேண்டும்..

தஞ்சாவூரில் தமிழ் வெளிபாட்டு முறையில் குடமுழுக்கு நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.