ETV Bharat / state

‘இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவேந்துவது குற்றமல்ல அது உரிமை’ - திருமுருகன் காந்தி - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி

மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு திருமுருகன் காந்தி கோரிக்கை விடுத்த திருமுருகன் காந்தி, இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவேந்துவது குற்றமல்ல அது உரிமை எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி

author img

By

Published : May 14, 2022, 4:38 PM IST

சென்னை: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முள்ளிவாய்க்காலில் நடத்த அநீதியை நினைவு கூறும்விதமாக மெரினா கடற்கரையில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும். நினைவேந்தல் நடத்துவதற்கு முக்கிய காரணம், இனி இது போன்ற ஈழப்படுகொலை நடைபெற கூடாது என்பதற்காகவும், கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதற்காகவும் தான்.

கட்சி, மதம், இனம், ஜாதிக்கு அப்பாற்பட்டு தமிழ்நாடு அரசே இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை எடுத்து நடத்த வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை அரசு செய்துதர வேண்டும். தமிழர்களுக்கு நினைவுவேந்தல் கூறுவதற்கு தமிழ்நாட்டில் சாத்தியம் இல்லை என்றால் தமிழ்நாடு அந்த அளவிற்கு அடிமைபட்டு இருக்கிறதா என்ற கவலை உண்டு.

செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டால் அது தமிழ் இனத்திற்கு செய்யப்பட்ட மற்றும் ஒரு அநீதியாகத்தான் இருக்கும். இறந்தவர்களுக்கு மரியாதை செய்ய அதிகாரம் உள்ளதாக ஐநாசபை தெரிவிக்கிறது. முள்ளிவாய்க்காலில் கூட பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவேந்துவது குற்றமல்ல அது உரிமை" எனக் கூறினார்.

இதையும் படிங்க: கருணாநிதி பெயர் சூட்டும் தீர்மானம் நிறுத்தம்..! அது அண்ணாமலைக்கு தெரியாது..- அமைச்சர் சொன்ன சேதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.