சென்னை மூல கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து நடராசன் நினைவிடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் இந்தியை திணித்தபோது தமிழை காக்க போராடி தாளமுத்து நடராசன் உயிர் நீத்தார்.
இன்னும் இந்தி திணிப்பு, சமஸ்கிருதமயமாதல் தொடர்கிறது. நாடாளுமன்ற மேலவையில் 70 விழுக்காடு அனைத்து கோப்புகளும் இந்தியில் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கும் அறிக்கைகள்கூட இந்தியில்தான் உள்ளது.
மறைமுகமாகவும் நேர்முகமாகவும் இன்னும் பல்வேறு தளங்களில் இந்தி திணிக்கப்படுகிறது. இந்து ராஷ்டிரம் எனும் செயல் திட்ட அடிப்படையில் மோடியின் கும்பல் செய்யப்படுகிறது. இத்தகைய போக்கை கைவிட வேண்டும். இந்திய பன்மைத்துவத்தை ஜனநாயக சக்திகள் காப்பாற்ற வேண்டும்.
விவசாயிகளின் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க நினைத்தால் உலக அரங்கில் வெட்கி தலைகுனிய வேண்டிய சூழல் ஏற்படும். விவசாயிகள் பேரணியில் துப்பாக்கி சூடு நடந்தால் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்