ETV Bharat / state

பெரியார் குறித்த பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்: திருமாவளவன்

author img

By

Published : Jan 17, 2020, 10:01 PM IST

சென்னை: பெரியார் குறித்து பேசியதற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ரஜினி குறித்து பேசிய திருமாவளவன்
ரஜினி குறித்து பேசிய திருமாவளவன்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் போரூர், மதுரவாயல் சுற்றுவட்டார இஸ்லாமிய அமைப்புகள், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் போரூர் ரவுண்டானா அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பூந்தமல்லி, போருர், மதுரவாயல், மாங்காடு, குன்றத்தூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், பட்டூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தேசிய கொடிகளுடன் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் முழக்கங்களை எழுப்பினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.

போரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆங்கில புத்தாண்டு, தமிழர் திருநாள் கொண்டாட்டம் வேண்டாம் என அறிக்கை விடுத்தேன். இதனால் நமது போராட்டம் திசை திரும்பிவிடக்கூடாது என்பதற்காக, இந்தப் போராட்டம் இரண்டாவது விடுதலை போராட்டத்திற்கு நிகரானது எனவேதான் அதனை சொன்னேன்.

இந்தப் போராட்டம் இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த நிலைக்கு மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கானது என்று எண்ணிவிடக்கூடாது. அனைத்து மதத்தவரும் தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள் வேண்டும்.

பிப்ரவரி 15ஆம் தேதி தேசம் காப்போம் என்ற பேரணியை திருச்சியில் நடத்த முடிவு செய்துள்ளோம். இது ஆபத்தான சட்டம், இந்த சட்டம் குறித்து மோடியும் அமித்ஷாவும் மாறி மாறி கருத்துகளைக் கூறி மக்களை குழப்பி வருகின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும், அதுதான் நமது கோரிக்கை” என தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசிய திருமாவளவன்

பின்னர் ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “பெரியார் குறித்த வரலாற்றுத் தரவுகளை நடிகர் ரஜினிக்கு வழங்கியவர்கள் சரியாக தரவில்லை என்றே தெரிகிறது. தந்தை பெரியார் எந்த இடத்திலும் ராமர் படத்தையும் சிலையையும் அவமதிக்கவில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. அந்த விளக்கத்தை திராவிட கழக தலைவர்கள் ஆதாரப்பூர்வமாக கூறி இருக்கிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பிழையை உணர்வார். அதற்காக வருத்தம் தெரிவிப்பார் என நம்புகிறேன். சமூகநீதி கோணத்திலிருந்து பெரியாரைப் பார்க்கத் தொடங்கினால் பெரியாரின் போராட்டங்களை அவரால் புரிந்துகொள்ள முடியும்.

பெரியார் குறிப்பிட்ட எந்த சாதிக்கும் நம்பிக்கைக்கும் எதிராக செயல்பட்டவர் அல்ல, சமூகநீதி வென்றெடுப்பதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளார். அவரை கொச்சைப்படுத்தும் விதமாக சங் பரிவார் அமைப்புகள் ஈடுபடுகின்றனர். சங் பரிவாரின் சதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பலியாகி விடுவார் என்பதற்கு இது ஒரு சான்று.

ரஜினி குறித்து பேசிய திருமாவளவன்

நடிகர் ரஜினிகாந்த், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார். மேலும், இக்கூட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: யாரும் எதிர்த்துப் பேச அஞ்சிய பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ! - ரஜினி புகழாரம்

Intro:பெரியார் குறித்த பேச்சுக்கு நடிகர் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என போரூரில் குடியுரிமை திருத்த மசோதவிற்கு எதிரான கூட்டத்திற்கு பின்னர் திருமாவளவன் பேட்டிBody:குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் போரூர், மதுரவாயல் சுற்று வட்டார மசூதிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் போரூர் ரவுண்டானா அருகே நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பூந்தமல்லி, போருர், மதுரவாயல், மாங்காடு, குன்றத்தூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், பட்டூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் தேசிய கொடிகளுடன் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசிய அவர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்
ஆங்கில புத்தாண்டு, தமிழர் திருநாள் கொண்டாட்டம் வேண்டாம் என அறிக்கை விடுத்தேன். இதனால் நமது போராட்டம் திசை திரும்பி விடக்கூடாது என்பதற்காக, இந்த போராட்டம் இரண்டாவது விடுதலை போராட்டத்திற்கு நிகரானது எனவே தான் அதனை சொன்னேன். இந்த போராட்டம் இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம் அந்த நிலைக்கு மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் முஸ்லீம்களுக்கு என்று என்னி விடக்கூடாது. அதனால் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறோம். பிப்ரவரி 15 ம் தேதி தேசம் காப்போம் என்ற பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம் திருச்சியில் நடத்த போகிறோம். இது ஆபத்தான சட்டம் இந்த சட்டம் குறித்து மோடி, அமித்ஷா மாறி, மாறி கருத்துக்களை கூறி மக்களை குழப்பி வருகின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டது இந்த சட்டம், இந்த சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் அதுதான் நமது கோரிக்கை.Conclusion:பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பெரியார் குறித்த ரஜினி பேச்சுக்கு
வரலாற்றுத் தரவுகளை அவருக்கு வழங்கியவர்கள் சரியாக தரவில்லை என்றே தெரியவருகிறது. தந்தை பெரியார் எந்த இடத்திலும் ராமர் படத்தையும், சிலையையும் அவமதிக்கவில்லை அதற்கான சான்றுகள் இல்லை அந்த விளக்கத்தை திராவிட கழக தலைவர்கள் ஆதாரப்பூர்வமாக கூறி இருக்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பிழையை உணர்வார் என்றும் அதற்காக வருத்தம் தெரிவிப்பார் என நம்புகிறேன். சமூக நீதி கோணத்திலிருந்து பெரியாரைப் பார்க்க தொடங்கினால் பெரியாரின் போராட்டங்களை அவரால் புரிந்துகொள்ள முடியும், அவர் குறிப்பிட்ட எந்த சாதிக்கும், நம்பிக்கைக்கும் எதிராக செயல்பட்டவர் அல்ல சமூக நீதி வென்றெடுப்பதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளார். அவரை கொச்சைப்படுத்தும் விதமாக
சங்பரிவார் அமைப்புகள் ஈடுபடுகின்றனர். சங் பரிவாரின் சதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பலியாகி விடுவார் என்பதற்கு இது ஒரு சான்று. அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க
100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.