ETV Bharat / state

‘புதுச்சேரியில் நடந்த அரசியல் சூழ்ச்சிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்’ - திருமாவளவன் - புதுவை நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்

சென்னை: புதுச்சேரியில் நடந்த அரசியல் சூழ்ச்சிகளைக் கண்டித்து இன்று (பிப். 24) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்
செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்
author img

By

Published : Feb 24, 2021, 7:55 AM IST

சென்னை விமான நிலையம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை, மத்திய பாஜக அரசு சூது, சூழ்ச்சி, சதித் திட்டங்களால் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ராஜினாமா செய்யவைத்து அரசை கவிழ்க்கச் செய்துள்ளது. இது அநாகரிகமான போக்கு, இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதேபோன்ற தில்லுமுல்லு வேலைகளைச் செய்வோம் என ஒரு ஒத்திகை வேலையாகத்தான் இதைச் செய்து காட்டியிருக்கிறார்கள். இத்தகைய போக்கை அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும் வேடிக்கை பார்க்காமல் ஒன்றிணைந்து கடுமையாக கண்டிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் இத்தகைய அரசியல் அரங்கேறாமல் தடுக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

இத்தகைய போக்கைக் கண்டித்து பிப்ரவரி 24ஆம் தேதி புதுச்சேரியில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் 7 தமிழர் விடுதலைசெய்யப்படுவார்கள், ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்படும் எனக் கருதப்பட்டது.

ஆனால், மத்திய பாஜக அரசு 7 பேர் விடுதலைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. முன்பிருந்த அரசியல் கட்சி என்ன நிலைப்பாட்டில் இருந்ததோ அதே நிலைப்பாட்டில்தான் பாஜகவும் உள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்

தமிழர்கள், ஈழத் தமிழர்கள், தமிழ்நாடு அரசியல் என அனைத்திற்கும் மத்திய பாஜக அரசு எதிராக உள்ளது. பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும், வேரூன்ற வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு அதிமுகவை பயன்படுத்துகிறார்கள்.

இது அதிமுகவிற்கு எதிராகப் போய் முடியும் என்பதை வருகின்ற தேர்தல் முடிவடைந்தபின் அதிமுக தலைவர்கள் உணருவார்கள். அதிமுக தொண்டர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'புதுச்சேரியின் அரசியலமைப்பை கேலிக் கூத்தாக்கியது பாஜக' - திருமுருகன் காந்தி விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.