ETV Bharat / state

மத்திய வேளாண் சட்டங்கள் அளவுக்கு ஆபத்தானது மத்திய தொழிலாளர் சட்டங்கள்- விசிக தலைவர் தொல். திருமாவளவன் - thol thiruma

தமிழகத்திற்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி இன்னும் வந்த பாடில்லை. அதனாலேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கொள்கை அடிப்படையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை எக்காரணம் கொண்டும் ஏற்கக் கூடாது என்ற நிலைப்பாடு உள்ளது என விசிக தலைவர் தெரிவித்தார்.

thol thiruma
thol thiruma
author img

By

Published : Sep 20, 2021, 9:24 PM IST

சென்னை: மத்திய வேளாண் சட்டங்கள் எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவு ஆபத்தானது மத்திய தொழிலாளர் சட்டங்கள் இதனை தமிழக அரசின் கவனத்திற்கு நிச்சயம் எடுத்துச் செல்வோம் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விசிக தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் அசோக் நகர் அம்பேத்கர் திடலில் கருப்புக்கொடி ஏந்தி தனது கட்சிப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், சோனியா அம்மையாரின் காணொலி கலந்தாய்விற்கு பிறகு விலைவாசி உயர்வு, மத்திய சட்டங்கள் எதிர்ப்பு ஆகிய நோக்கங்களுடன் 20ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் போராட்டம் துவங்கப்பட்டுள்ளது.

கரோனா நோய் தொற்றின் காரணமாக, ஆயிரக்கணக்கானோரை திரட்டி போராடாமல் கட்சி அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலிருந்தே கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் இயற்றியது போல, மத்திய தொழிலாளர் சட்டங்களை ஏன் தமிழக அரசு எதிர்க்கவில்லை என்று பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன்,
மத்திய வேளாண் திட்டங்கள் எதிர்க்க என்னென்ன காரணங்கள் உண்டு, அதே காரணங்கள் தொழிலாளர்கள் புதிய சட்டங்கள் எதிர்க்கவும் உள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழக அரசிற்கு நிச்சயம் எடுத்துச் செல்வோம் என்று தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலைவாசியில் ஜிஎஸ்டி கொண்டு வருவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்படி அணுகுகிறது என்பது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கூடாது. மாநில உரிமைகளை பறிக்கும் தாதாயிஸத்தை விசிக எதிர்க்கிறது. தமிழகத்திற்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி இன்னும் வந்த பாடில்லை. அதனாலேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கொள்கை அடிப்படையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை எக்காரணம் கொண்டும் ஏற்கக் கூடாது என்ற நிலைப்பாடு உள்ளது என்றார்.

நீட் தேர்வு தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், நீட் கூடாது என்பதுதான் நிலைப்பாடு ஆனாலும் அதை கொண்டுவர ஒரு வழிமுறை இருக்கிறது. அதன்படி தான் தமிழக அரசு சட்டசபையில் மசோதா இயற்றியது, அது சட்டம் ஆவது என்பது குடியரசுத் தலைவரின் ஒப்புதலிலேயே உள்ளது. ஒருவேளை அவர் ஒப்புதல் தரவில்லை என்றால் நிச்சயமாக போராட்டங்கள் தொடரும் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.