ETV Bharat / state

சுவாமிமலையில் கார்த்திகை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம் - ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா

தஞ்சாவூர்: சுவாமிமலையில் ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

swamimalai
swamimalai
author img

By

Published : Dec 4, 2019, 10:48 AM IST

முருகனின் 4ஆம் படை வீடான சுவாமிமலை ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுப்ரமணிய ஸ்வாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலில் இருந்து உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கஜ உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதணை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதனிடையே 3ஆவது சோம வாரத்தையொட்டி, திருபுவனத்திலிந்து பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டிய மழையிலும் காவடி மற்றும் பால் காவடி சுமந்து பாதயாத்திரையாக சென்று ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

சுவாமிமலையில் கார்த்திகை திருவிழா

திருக்கார்த்திகை விழாவையொட்டி சுப்ரமணிய ஸ்வாமி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் மற்றும் தீபக்காட்சி வரும் 10ஆம் தேதியும் நடைபெற உள்ளது. தொடர்ந்து, வரும் 11ஆம் தேதி காவிரிக் கரையில் தீர்த்தவாரியுடன் திருக்கார்த்திகை திருவிழா நிறைவடைகிறது.

இதையும் படிங்க...

குற்றால அருவியில் ஐயப்ப பக்தர்கள் குளிக்கத் தடை!

Intro:தஞ்சாவூர் நவ 03

சுவாமிமலையில் ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
Body:
முருகனின் 4 ஆம் படை வீடான சுவாமிமலை ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

இத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுப்ரமணிய ஸ்வாமி பரிவாரங்களுடன் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார்.

பின்னர் கொடிமரதிற்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கஜ உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதனிடையே 3 வது சோம வாரத்தையொட்டி, திருபுவனத்திலிந்து பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால் காவடி சுமந்து கொட்டிய மழையிலும் பாதயாத்திரையாக சென்று ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

திருக்கார்த்திகை விழாவையொட்டி சுப்ரமணிய ஸ்வாமி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் மற்றும் தீபக்காட்சி வரும் 10 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

வரும் 11 ஆம் தேதி காவிரிக் கரையில் தீர்த்தவாரியுடன் திருக் கார்த்திகை திருவிழா நிறைவடைகிறது.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.