ETV Bharat / state

ராமலிங்கம் கொலை வழக்கு - குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: மதமாற்ற முயற்சியை தடுத்து நிறுத்தியதால் திருப்புவனம் ராமலிங்கத்தை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிஜாம் அலி என்பவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court chennai
high court chennai
author img

By

Published : Mar 10, 2020, 7:55 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதை தடுத்ததற்காக திருபுவனத்தைச் சேர்ந்த பா.ம.க முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார் என

கடந்த 2019 பிப்ரவரி 5ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன், முகமது ரியாஸ், நிஜாம் அலி உள்பட 12 பேரை கைது செய்தது. இவர்கள் தவிர, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆறு பேர் சேர்த்து, 18 பேருக்கு எதிராக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஓராண்டாக சிறையில் இருப்பதாகக் கூறி, நிஜாம் அலி என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிஜாம் அலி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லாததால், சந்தேகத்தின் பலனை அளித்து ஜாமீன் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், பயங்கரவாத செயல்களை தடுக்கவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், ராமலிங்கம் கொலை வழக்கு சாதாரண கொலை வழக்குதான் எனவும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகள் அதே பகுதியில் வசிப்பதால், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகள் தைரியமாக சாட்சி சொல்லமுடியாது என்ற அரசுத்தரப்பு வாதத்தில் நியாயம் உள்ளதாகக் கூறி, நிஜாம் அலியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.