சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு (நவம்பர் 26) சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளைச் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு பயணிகள் மீது சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி உடைமைகளைச் சோதனை செய்தபோது கிஃப்ட் தாளால் சுற்றப்பட்ட ஒரு பாா்சல் இருந்தது.
அதைச் சோதனை செய்தபோது அட்டைப் பெட்டிக்குள் மரத்தூள்களுக்கிடையே இரண்டு தங்கக்கட்டிகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 745 கிராம் எடையுள்ள தங்கத்தின் விலை சுமார் 32 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. பின்னர் இருவரையும் கைதுசெய்து, தங்கக் கட்டிகளை சுங்கத் துறையினர் பறிமுதல்செய்தனா்.
ஸ்கேன் பரிசோதனையில் தங்கக்கட்டிகள் இருப்பது தெரியாமல் இருப்பதற்காக, மரத்தூள்கள் அடங்கிய பாா்சலில் தங்கக்கட்டிகளை மறைத்து எடுத்துவந்தனர்.
இதையும் படிங்க: சர்வதேச பயணிகள் விமான சேவை டிசம்பர் 15 முதல் தொடக்கம்