ETV Bharat / state

கதவு, குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களைக்கூட விட்டுவைக்காத திருடன்! - Chennai dist news

சென்னை: பல்லாவரம் அருகே திருடவந்த வீட்டில் பணம், நகை இல்லாததால் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்கள், வீட்டின் கதவு, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற திருடனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

thief-who-never-leaves-the-door-of-the-house-negligent-police

author img

By

Published : May 23, 2020, 11:18 AM IST

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் தம்பதி ஆனந்தன்-மோனிஷா. ஆனந்தன் பல்லாவரம் பகுதியிலுள்ள ஒரு பிரியாணி கடையில் வேலை பார்த்துவருகின்றார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கடைகளில் பார்சல் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ஆனந்தனுக்கு வேலையில்லாமல் போனது.

இதனால் மனமுடைந்த அவர், பல்லாவரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளார். கடந்த ஏழு நாள்களுக்கு முன்பு ஆனந்தனின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆனந்தனின் வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து உடனே அவருக்குத் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து ஆனந்தன், குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது வீட்டிலிருந்த நான்கு சீலிங் ஃபேன், மிக்சி, கிரைண்டர், சிலிண்டர், பாத்திர பண்டங்கள் உள்பட குழந்தைகள் விளையாடும் சொப்பு சாமான்களைக்கூட விட்டுவைக்க மனமில்லாமல், திருடன் தனது கைவரிசையைக் காட்டியுள்ளான் என்பது தெரியவந்தது.

மேலும், வீட்டிலிருந்த பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாத காரணத்தால் விரக்தியடைந்த திருடன், வீட்டின் கதவையும் விட்டுவைக்காமல் கழற்றிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் காவல் துறையினர் கரோனா காரணமாக புகாரை ஏற்க மறுத்து, கோவிட்-19 பிரச்னை முடிந்த பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளனர்.

காவல் துறையினரின் இந்தப் பேச்சைக் கேட்டதும், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது குறித்து பேசிய ஆனந்தன், "கரோனா ஊரடங்கு உத்தரவால் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நாங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய பொருள்கள் எல்லாம் திருடுபோயுள்ளன.

இது எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கின்றது. எங்களது புகாரை ஏற்றுக்கொண்டு காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதையும் படிங்க:உறவினர்களுக்கு இடையே தகராறு: குழந்தைகளுக்கு அரிவாள் வெட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.