ETV Bharat / state

பெண்ணிடம் கத்தியைக் காட்டி நகை பறிக்க முயற்சி  - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

வீட்டிலிருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி, நகை பறிக்கும் முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Thief
கத்தியைக் காட்டி நகை பறிக்க முயற்சி
author img

By

Published : Jul 23, 2021, 10:54 PM IST

மதுரை: மேலூர் பிஸ்மில்லா நகரைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அமினா பீவி (55), மகள், மருமகள்களுடன் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது, வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் அமீனா பீவியிடம் கத்தியைக் காட்டி நகை பறிக்க முயன்றனர்.

இதில் அமினா பீவிக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு, வீட்டில் உள்ளவர்கள் வரவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர்.

பெண்ணிடம் கத்தியைக் காட்டி நகை பறிக்க முயற்சிக்கும் சிசிடிவி

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல் துறையினர், வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர் .

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த அமினா பீவி, சிகிச்சைக்காக மேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜீன்ஸ் அணிந்ததால் சிறுமி கொலை: உத்தரப்பிரதேசத்தில் நடந்த கொடூரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.