சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில், வெளியூரிலிருந்து வரும் பயணிகளை குறிவைத்து செல்போன் திருட்டு நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதனையடுத்து திருட்டில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க கோயம்பேடு காவல்துறையினர் தனிப்படை அமைத்து, பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
இதன்பேரில், விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 1 செல்ஃபோன் பறிமுதல் செய்யப்பட்டது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் சிலர் தங்கள் ஊருக்கு செல்வதற்கு பேருந்து ஏதும் கிடைக்காமல், பேருந்து நிலையத்தில் தூங்கிவிட்டு காலையில் செல்வது வழக்கம்.
இந்நிலையில், இரவு தூங்கும் நபர்களின் அருகில் சென்று தூங்குவது போல நடித்து அவர்களிடமிருந்து செல்போன், கைப்பை, மணிபர்ஸ் ஆகியவற்றை திருடிச் செல்வதை இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும், இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.