ETV Bharat / state

சென்னை மாமன்றத்தில் தெரிவிக்கும் பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பதில்லை - குமுறும் மாமன்ற உறுப்பினர்கள் - Chennai Corporation Mayor Priya replied

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தெரிவிக்கும் பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பதில்லை என்று மாமன்ற கூட்டத்தில் பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

மாமன்றத்தில் தெரிவிக்கும் பிரச்சனைக்கு தீர்வு இல்லை- குமுறும் மாமன்ற உறுப்பினர்கள்!

author img

By

Published : Sep 29, 2022, 5:59 PM IST

சென்னை: செப்டம்பர் மாதத்திற்கான மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை மாமன்ற கூட்ட அரங்கில் இன்று (செப்.29) நடைபெற்றது. அப்போது 92ஆவது வார்டு, உறுப்பினர் திலகர் மாமன்ற கூட்டத்தில் பேசுகையில், கடந்த முறை மாமன்ற கூட்டத்திலும், வார்டு குழு கூட்டங்களிலும் வைக்கப்பட்ட கோரிக்கை (மழை நீர் வடிகால் பணி மற்றும் சாலைகள் அமைக்கும் பணி) இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆளுங்கட்சி உறுப்பினருக்கே இந்த நிலைமை என்று ஆதங்கம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மேயர் பிரியா ராஜன், வார்டு எண் 92இல் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள், நடைபெற்று முடிந்த பணிகள் விவரத்தை தேதி குறிப்பிட்டு விளக்கினார். ஐந்து மாதங்களில் வார்டு எண் 92இல் மட்டும் 12 பணிகள் ரூ.67.99 லட்சம் மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி பணிகளும் விரைவில் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதன்பின் 105ஆவது, வார்டு அதியமான் கூறுகையில், விருகம்பாக்கம் முதல் ஸ்கைவாக் வரை உள்ள கால்வாய் கிட்டத்தட்ட 20 அடி அகலம் உள்ளது. ஆனால் அதில் 5 அடி அகலம் மட்டுமே தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மீதி 15 அடி குப்பைகள் மற்றும் தேவையற்ற கழிவுகளால் அடைக்கப்பட்டுள்ளன. இதனை சரி செய்ய வேண்டும் என்று பல முறை அதிகாரியிடம் தெரிவித்தேன். சென்ற முறையும் இக்கூட்டத்தில் தெரிவித்தேன். ஆனால் இன்னும் முழுமையாக அது சரி செய்யவில்லை என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, இதைப் பற்றி பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவிக்கிறோம் விரைவில் அவர்கள் தொடங்குவார்கள் என்றார். அதன்பின் 6வது வார்டு, சாமுவேல் திரவியம் கூறுகையில், என்னுடைய வார்டில் இருக்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் சாலை வசதி மற்றும் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என சென்று மாமன்ற கூட்டத்தில் பேசி உள்ளேன். ஆனால் அதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை 60 ஆண்டு காலமாக அங்கு சாலை மற்றும் மழைநீர் வடிகால் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும் அவ்வளவுதான் ஆனால் அதனை செய்யாமல் அங்கே இருக்கும் ரயில்வே துறையிடம் தடையில்லாச் சான்றிதழை அதிகாரிகள் கேட்கின்றனர். இதனால் தீர்வு கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றார்கள் என்றார். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, மழைக்காலம் முடிந்து ஜனவரி மாதத்தில் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கிவிடும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் நவராத்திரி கொலு !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.