ETV Bharat / state

9 திருட்டு வாகனங்கள் பறிமுதல்: மூன்று பேர் கைது! - police officer

சென்னை: புதுப்பேட்டையில் ஒன்பது திருட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதனைத் திருடி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Theft
author img

By

Published : Jun 8, 2019, 8:49 PM IST

சென்னை புதுப்பேட்டை வெங்கடாஜல நாயக்கன் தெரு சந்திபில் ஒன்பது திருட்டு இருசக்கர வாகனங்களை வாங்கிவந்து அதனை பிரிப்பதற்காக இறக்கியுள்ளனர். அப்போது எழும்பூர் உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையில் வந்த போலீசார், அனைத்து இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் திருட்டு பைக்குகளை வாங்கி விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று பேசி திட்டமிட்டு அவர்கள் தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சபூர் மொய்தீன், ஜாகீர் உசேன், சத்திவேல் ஆகிய மூன்று பேரை கைது செய்து எழும்பூர் காவல் நிலையத்தில் 379, 411, 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குற்றவாளிகள் மூவரையும் ஆறாவது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி முன் ஆஜர் செய்து 8ஆம் தேதியில் இருந்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தனர். அதன் பேரில் அம்மூவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை புதுப்பேட்டையில் 9திருட்டு இருசக்கர வாகனங்களை கொண்டு வந்து இறக்கும் போது  போலீசார் பறிமுதல் செய்து மூன்று பேர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்...

சென்னை புதுப்பேட்டை வெங்கடஜலநாயக்கன் தெரு சந்திபில்
9திருட்டு இருசக்கர வாகனங்களை வாங்கி வந்து பிரிப்பதற்காக இறக்கிய போது எழும்பூர் உதவி ஆணையர் பிரபாகரன் தலைமையில் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் உரிய ஆவணம் இல்லாத திருட்டு பைக்குகளை வாங்கி விற்பனை செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என  பேசி திட்டமிட்டு தொழில் செய்து வந்ததாக தெரியவந்துள்ளது...

இந்த சம்பவம் தொடர்பாக சபூர் மொய்தீன், ஜாகீர் உசேன் மற்றும் சத்திவேல் ஆகிய மூன்று நபர்களை கைது செய்து  எழும்பூர் காவல் நிலையத்தில் 379,411,120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  எதிரி மூவரையும் 6-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி முன் ஆஜர் செய்து 08.06.2019 தேதியில் இருந்து 15 நாள் நீதிமன்ற காவலுக்கு உத்தரவு பிறப்பித்ததின் பேரில் எதிரி மூவரையும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.