சென்னை ஆவடி மத்திய பாதுகாப்பு துறைக்குச் சொந்தமான ஆர்டனன்ஸ் டெப்போ ( ORDINANCE DEPOT) தொழிற்சாலையில் ஆண்டுக்கு ஒருமுறை ஸ்கிராப் ஏலம் விடுவது வழக்கம். கடந்த 35 ஆண்டுகளாக காளிமுத்து என்பவர் ஏலம் எடுத்து வருகிறார்.
அதன் அடிப்படையில் நேற்று வழக்கம்போல் ஏலம் விடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. தொழிற்சாலை வாயிலில் பாதுகாவலர்கள் லாரியை சோதனை செய்த போது சந்தேகமடைந்தனர். உடனே அவர்கள் டிட்டாச்மெண்ட் சதர்ன் கமாண்ட் லைசன்ஸ் விஜிலென்ஸ்க்கு தகவல் அளித்தனர்.
அதன் போரில் அங்கு வந்த அவர்கள் லாரியை திருமுல்லைவாயிலில் உள்ள எடை மேடைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் ஒரு லாரிக்கு ஐந்து டன் வீதம் மூன்று லாரிக்கு 15 டன் இருக்கவேண்டும்.
ஆனால் கூடுதலாக ஒரு லாரியில் எட்டு டன் ஏற்றி சுமார் 24 டன் திருடி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரி ஓட்டுனர்கள் தயாளன், அஜித்குமார் மற்றும் அசோக்குமார் ஆகிய மூவரையும் ஆவடி டேங்க் பாக்ட்ரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாதுகாப்பு துறைக்குச் சொந்தமான இடத்திலிருந்து சுமார் 24 டன் இரும்பு பொருள்களை கூடுதலாக எடுத்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:
போக்குவரத்தை சுலபமாக சீர் செய்ய நவீன ரோந்து வாகனம் அறிமுகம்!