ETV Bharat / state

முழு ஊரடங்கு - அடுத்தடுத்த ஐந்து கடைகளில் கொள்ளை - theft IN five shops AT perungalathur

தாம்பரத்தில் முழு ஊரடங்கைப் பயன்படுத்தி அடுத்தடுத்த ஐந்து கடைகளின் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டை உடைத்து கொள்ளை
பூட்டை உடைத்து கொள்ளை
author img

By

Published : Jan 25, 2022, 8:10 AM IST

சென்னை: தாம்பரம் அடுத்த பீர்க்கண்கண்காரணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய பெருங்களத்தூர் கலைஞர் சாலையில் செல்வநாதன் என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் (ஜனவரி 23 ) முழு ஊரடங்கு என்பதால் கடையை திறக்கவில்லை. நேற்று வழக்கம் போல கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

அதே போல் அருகே உள்ள ரத்தினா ஸ்டோர் மளிகை கடையின் பூட்டை உடைத்து 5000 ரூபாயும், கே.பி.எஸ் பால் கடையின் பூட்டை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

பூட்டை உடைத்து கொள்ளை
பூட்டை உடைத்து கொள்ளை

புதிதாகத் திறக்கப்பட்ட மெடிக்கல் ஷாப் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பூட்டை உடைத்து கொள்ளை
பூட்டை உடைத்து கொள்ளை

பிரபல பேக்கரி கடை பூட்டை உடைக்க முயற்சித்து உடைக்க முடியாமல் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில் பீர்க்கண்காரணை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: Smuggle Ivory: யானைத் தந்தம் கடத்தலில் கைதான 4 பேருக்கு கரோனா பாதிப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.