ETV Bharat / state

ரெட்ஹில்ஸ்: ஒரே இரவில் கோயில் உட்பட மூன்று இடங்களில் திருட்டு

author img

By

Published : Nov 23, 2020, 8:26 PM IST

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் ஷூ அணிந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் கடப்பாரையுடன் உள்ளே நுழைந்து கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

theft in chennai redhills area
theft in chennai redhills area

சென்னை: ரெட்ஹில்ஸ் பகுதியில் ஒரே இரவில் கோயில் உட்பட மூன்று இடங்களில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

ரெட்ஹில்ஸ் மொண்டியம்மன் நகரை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவர் ஏரிக்கரையில் செயல்பட்டு வரக்கூடிய அம்மன் கோயிலில் செயலாளராக இருந்து வருகிறார். இவர் இன்று ரெட்ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அம்மன் கோயிலில் அர்ச்சகராகவுள்ள அசோக்குமார் வழக்கம்போல் நேற்று கோயிலை மூடிவிட்டு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை கோயிலை திறக்க வரும்போது முன்பக்க பூட்டு உடைந்த நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர், உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் ஷூ அணிந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் கடப்பாரையுடன் உள்ளே நுழைந்து கோயிலின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த அடையாளம் தெரியாத நபர், அருகே உள்ள கக்கன்ஜி தெருவிற்கு சென்று மளிகை கடை ஷட்டரை உடைக்க முயற்சி செய்துள்ளார். ஷட்டரை உடைக்க முடியாததால் அடுத்ததாக ஜோதி நகர் 4ஆவது தெருவிற்கு சென்று ஹாஜாமைதீன் என்பவரின் டீக்கடையை உடைத்து, அதிலிருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. எனவே இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.