சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை இயங்கி வருகிறது. இந்த துணிக்கடையில் சுமார் 10 ஆண்டுகளாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் (33) பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இவர் விற்பனை செய்யும் பிரிவுகளில் இருந்து விலையுயர்ந்த துணிகள் காணாமல் போயுள்ளன. இதனால் சந்தேகமடைந்த நிர்வாகம் என்ன செய்வது என்று புரியாமல், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது சிசிடிவி காட்சி மூலம் ராமசுப்பிரமணியன் துணிகளைத் திருடுவது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராம சுப்பிரமணியன் மீது சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நிலக்கரி திட்டத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு தொடரும் ஏமாற்றம்