சென்னை - அம்பத்தூர் சூரப்பட்டு, சமயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு சந்தேகத்திற்குரிய வகையில் உடைக்கப்பட்டு இருப்பதாக, கடையின் மேற்பார்வையாளர் சக்கரப்பன், அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த 74 மதுபாட்டில்கள் திருடு போனது தெரிய வந்தது.
இந்நிலையில், அதே பகுதியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைக்க முயற்சித்த சந்தேகத்திற்குரிய நபர்கள் மளிகைக் கடை மற்றும் எலெக்ட்ரிக்கல் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
இதில் எலெக்ட்ரிக்கல் கடையில் 10 மின்விசிறிகளும், மளிகைக் கடையில் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: துரத்தி வந்த ட்ரோன்! தெறித்து ஓடிய இளைஞர்கள்!