ETV Bharat / state

நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு - பணியாளர் மீது பரபரப்பு புகார் - Parvati Nair photos

நடிகை பார்வதி நாயர் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் திருடப்பட்டது தொடர்பாக வீட்டில் பணிபுரிந்த பணியாளர் மீது பார்வதி நாயர் புகார் அளித்துள்ளார்.

நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு - பணியாளர் மீது பரபரப்பு புகார்

author img

By

Published : Oct 20, 2022, 1:18 PM IST

சென்னை: என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட தமிழ்த்திரைப்படங்களில் நடித்தவர், நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (அக். 18) படப்பிடிப்பை முடித்த பார்வதி நாயர், வழக்கம்போல் வீட்டிற்குத் திரும்பி உள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கை கடிகாரம், ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோன் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவை திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து இவர் மேற்கொண்ட விசாரணையில், இவரது வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற பணியாளர், வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை திருடிச்சென்றது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து இது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பார்வதி நாயர் புகார் அளித்துள்ளார். இவ்வாறு பெற்ற புகாரின் அடிப்படையில், நுங்கம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிக்காத மீராமிதுன்; தேடுதல் வேட்டையில் காவல்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.