ETV Bharat / state

சென்னையில் செல்போன் கடையில் திருட்டு - போலீஸ் விசாரணை

author img

By

Published : Sep 29, 2022, 4:28 PM IST

செல்போன் கடையில் மொபைல் பவுச் வாங்குவது போல நடித்து கடையில் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை நூதன முறையில் திருடிச் சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Etv Bharat சிசிடிவி காட்சி
Etv Bharat சிசிடிவி காட்சி

சென்னை: அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பிளாக் பகுதியில் அஜ்மீர் அலி (41) என்பவர் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவரது, கடைக்கு நேற்று (செப்.28) மாலை மொபைல் பவுச் வாங்க இருவர் வந்தனர். அப்போது, அஜ்மீர் அலியின் மனைவி கடையில் இருந்துள்ளார். அவர் மொபைல் பவுச் எடுப்பதற்காக கடையினுள் சென்றுள்ளார்.

அப்போது, இருவரும் கடையில் இருந்த ரூ.1.5 லட்சம் பணம், விலை உயர்ந்த செல்போன் ஒன்று மற்றும் 5 கிரெடிட் கார்டு, 2 டெபிட் கார்டு ஆகியவை அடங்கிய கைப்பையை திருடிச் சென்றனர். அதன்பின் வெளியே வந்து அஜ்மீர் அலியின் மனைவி திருட்டு நடந்திருப்பதை அறிந்தார்.

சிசிடிவி காட்சி

இந்த சம்பவம் குறித்து அவர், அஜ்மீர் அலிக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் அஜ்மீர் அலி கொடுத்த புகாரின் பேரில் அரும்பாக்கம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் எனக்கூறி 10 லட்சம் மோசடி செய்ய முயன்றவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.