சென்னை ஆதம்பாக்கம், மண்ணடி அம்மன் கோவில் தெருவில் உள்ளவர் எட்வின் கார்க் (25). இவர் தனது வீட்டில் 3 பேருடன் மது அருந்தியுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் (23) என்ற இளைஞரை தலையில் சிமெண்டாலான பூந்தொட்டியைப் போட்டு கொலை செய்துள்ளனர். கொலை செய்துவிட்டு எட்வின் தப்பியோடியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆதம்பாக்கம் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, கொலை தொடர்பாக உடன் மது அருந்திய தினேஷ், ரவி ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை 20 அன்று இதே வீட்டில் எட்வின் அவரது உறவினரான மணிகண்டன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன் தினம் சிறையில் இருந்து வெளியில் வந்த எட்வின், மீண்டும் ஒரு கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மேகேதாட்டு அணை திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - வைகோ