சென்னை: தமிழ்நாடு முழுவதும் 5ஆயிரத்து 529 காலி இடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல் நிலைத் தேர்வுகள் இன்று (மே21) நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு, 6.82 லட்சம் பெண்கள் உள்பட, 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
TNPSC தேர்வில் குரூப் 2, 2ஏ தேர்வில் "யூனியன் பிரதேசங்களின்" என்ற வார்த்தையின் மொழிபெயர்ப்பாக "ஒன்றிய பிரதேசங்களின்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய தேர்வுகளில் தமிழிலும் யூனியன் பிரதேசம் என்றே குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், இப்போது "ஒன்றியம்" என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று ஆட்சியாளர்கள் பேசிவரும் நிலையில், TNPSC தேர்விலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குற்றவாளி குற்றவாளி தான்.. குற்றவாளி கடவுளாக முடியாது - கே.எஸ்.அழகிரி