ETV Bharat / state

குழந்தையின்மை போக்குவதாக பல லட்சம் மோசடி- கருத்தரிப்பு மையம் மீது குற்றச்சாட்டு - Avadi ARC Fertility Centre

குழந்தையின்மையை போக்குவதாக கூறி பல லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ஆவடி ARC கருத்தரிப்பு மையத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharatகுழந்தையின்மை போக்குவதாக பல லட்சம்  மோசடி- கருத்தரிப்பு மையத்தின் மீது குற்றச்சாட்டு

author img

By

Published : Aug 4, 2022, 10:05 AM IST

சென்னை: காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரியப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலர் குழந்தையின்மை பிரச்சனைக்காக ஆவடியில் உள்ள ARC கருத்தரிப்பு மையத்தை அணுகி சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பரிசோதனை, சிகிச்சை என பல்வேறு காரணங்களை கூறி 4 லட்சம் வரை பண பெற்றுக்கொண்டு தற்போது சிகிச்சை பலனளிக்கவில்லை என கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் ஆவடி ARC மையத்தை அணுகி முறையிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் முறையாக பதிலளிக்காமல் அவதூறாக பேசியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் ARC மைய வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், "திருமணமாகி சுமார் 7 வருடமாக குழந்தை இல்லை. கடந்த டிசம்பர் மாதம் குழந்தையின்மை சிகிச்சை மேற்கொள்ள ஆவடி ARC மையத்தை அணுகினோம்.

ஆரம்பத்தில் PACKAGE முறையில் பணம் பெற்றுக்கொண்டு பின்னர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்,விந்தணுக்கள் செலுத்த வேண்டும் என கூறி 4 லட்சம் வரை பெற்றுக்கொண்டனர். அனைத்தும் நன்றாக இருக்கிறது என கூறிவிட்டு திடீரென தங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை,உடல் ஒத்துழைக்கவில்லை என கூறி ஏமாற்றி விட்டனர் என வேதனை தெரிவிக்கிறார். இது சம்பந்தமாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ARC மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள்
பாதிக்கப்பட்டவர்கள்

இதேபோன்று தேன்மொழி என்ற பெண்ணுக்கு கரு உருவாகிய நிலையில் கர்ப்பப்பையில் கட்டி உள்ளது. இதானல் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கூறி கரு களைப்பு மாத்திரை வழங்கி கருவை களைத்ததாக பகிர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். எனவே உடனடியாக இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:சோகத்தில் முடிந்த ஸ்கேட்டிங் பயணம்..! லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.