ETV Bharat / state

'வன்னியர் தனி இடஒதுக்கீடுப் போராட்டம் தேர்தலுக்காக நடத்தப்பட்டது இல்லை'- அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Dec 1, 2020, 4:42 PM IST

Updated : Dec 1, 2020, 5:06 PM IST

வன்னியர் தனி இடஒதுக்கீடுப் போராட்டம் தேர்தலுக்காக நடத்தப்பட்டது இல்லை என்றும் இது உரிமைப் பிரச்னை என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

pmk vanniyar reservation struggle
'வன்னியர் தனி இடஒதுக்கீடுப் போராட்டம் தேர்தலுக்காக நடத்தப்பட்டது இல்லை'- அன்புமணி ராமதாஸ்

சென்னை: வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பாமகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பாமகவினரை காவல்துறையினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

சென்னை தீவு திடல் அருகே உள்ள மன்றோ சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முன்னதாக பாமகவினர் அறிவித்திருந்தனர். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, வழக்கறிஞர் பாலு, உள்ளிட்டோர் வருகை புரிந்து காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் பல்லவன் சாலையில் இருந்து பாமகவினர் பேரணியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் மன்றோ சிலைக்கு வருகை புரிந்தனர்.

பின்னர் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், "வன்னியர் சமுதாயத்திற்கு எத்தனை இடங்கள் கொடுத்துள்ளார்கள் என்ற புள்ளிவிவரம் கேட்டும், 20விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கேட்டும் இந்த ஆர்ப்பாட்டம் அறவழியில் நடைபெற்றது. இது ஒரு தொடக்கம்தான். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவர் ராமதாஸ் போராடி வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைச் சந்தித்து தனி இடஒதுக்கீடு தொடர்பாக ராமதாஸ் கோரிக்கை வைத்தார். கடந்தாண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இது அரசியல் பிரச்சினை கிடையாது. தேர்தலுக்காக நிச்சயமாக இதனை செய்யவில்லை. இது எங்கள் உரிமை சார்ந்த பிரச்னையாகும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி பிரச்னையாகும். இது ஒரு சாதி சார்ந்த பிரச்சினை அல்ல. இதற்கு தமிழ்நாட்டின் அனைத்து சாதியினரும் ஆதரவு கொடுக்கின்றனர். இந்த போராட்டத்தினை நாங்கள் எந்தவொரு சாதிக்கு எதிராகவோ, அரசியல் கட்சிக்கு எதிராகவோ நடத்தவில்லை. தமிழ்நாட்டில் 25 விழுக்காடு இருக்கும் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் எந்த முன்னேற்றமும் கிடையாது.

தமிழ்நாட்டில் உள்ள 21 துணைவேந்தர்களில் ஒருவர்கூட வன்னியர் கிடையாது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியில் இதுவரை ஒரு வன்னியரும் வந்தது கிடையாது. சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகளில் நேரடியாக முதன்முறையாக ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி தேர்வாகி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். மற்றவர்களுக்கு சோறு போடும் சமுதாயமாகவும், ரோடு போடும் சமுதாயமாகவும், கல்லுடைக்கும் சமுதாயமாகவும், வீடு கட்டும் சமுதாயமாகவும் இருக்கும் வன்னியர் சமுதாயத்தில் எந்தவித முன்னேற்றமும் கிடையாது.

மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். அப்போது வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளில் வன்னியர்களுக்கு 20விழுக்காடு தனி ஒதுக்கீடு முக்கியமான கோரிக்கையாகும். அந்த கோரிக்கை குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு ராமதாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினார்.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம். போராட்டத்திற்கு வந்த தொண்டர்களை காவல்துறையினர் ஆங்காங்கே நிறுத்தி தடுத்து வைத்துள்ளனர். அவர்களை காவல்துறையினர் எந்த வழக்கும் இன்றி விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சருடனான சந்திப்பிற்கு பின்னர் போராட்டம் குறித்து அறிவிப்போம்" என்றார்.

இதையும் படிங்க: ’பாமகவின் நியாயமான போராட்டத்தை காவல்துறை நசுக்குகிறது’

Last Updated : Dec 1, 2020, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.