சென்னை: கடந்த 1933ஆம் ஆண்டு சென்னை மாநகரின் மேயராக புகழ்பெற்ற ராஜா முத்தையா செட்டியார் பதவியேற்றார். அப்போது அவர் தனது சொந்த செலவில், ஒரே தேக்கு மரத்தாலான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய நாற்காலி, 105 சவரன் தங்கச்சங்கிலி, அங்கி வெள்ளியிலான செங்கோல் உள்ளிட்டவற்றை சென்னை மாநகராட்சிக்கு நன்கொடையாக வழங்கினார்.
அன்று தொடங்கி, இன்று வரை சென்னை மாநகர மேயராக பதவி ஏற்கும் அனைவரும் பாரம்பரியமாக தங்கச்சங்கிலி, அங்கி உள்ளிட்டவற்றை அணிந்து அமர வைக்கப்படுவர். முதலமைச்சர், பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்கும் பெரும் அரசு விழாக்களில் மட்டுமே மொத்த தங்கச்சங்கிலியையும் மேயர்கள் அணிவார்கள்.
பிற சமயங்களில் ஒவ்வொரு மாமன்ற கூட்டத் தொடரின் போதும், சின்ன டாலருடனான தங்கச்சங்கிலியை அணிந்திருப்பர். அரசு விழாக்கள் இல்லாத சமயத்தில் தங்கச்சங்கிலி உள்ளிட்டவை இந்தியன் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
பாதுகாப்பு மாநகராட்சி ஆணையராக பதவி வகிக்கும் நபரிடம் ஒரு சாவியும், வங்கி மேலாளரிடம் ஒரு சாவியும் என இரு சாவிகள் இருக்கும். அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியின் இன்றைய மொத்த மதிப்பு 48 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இதையும் படிங்க: சென்னை மேயராக பதவியேற்றார் பிரியா...!