ETV Bharat / state

கூலி தொழிலாளி உயிரிழப்பில் மர்மம் : போலீசார் விசாரணை - chennai district news

சென்னை: கூலி தொழிலாளியை கிணற்றிலிருந்து சடலமாக மீட்ட போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணறு
கிணறு
author img

By

Published : Nov 22, 2020, 10:05 AM IST

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி டிஎம்பி நகரைச் சேர்ந்த செல்வம் (48), இன்று (நவ.22) கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று காலை (நவ.21) செல்வத்தை அவரது மகன் சுனில் கடைசியாகப் பார்த்துள்ளார். அதன் பின்னர் அவர் மாயமாகியுள்ளார். செல்வத்தின் உறவினர்கள் அவரை சுற்றுவட்டாரத்தில் தேடியுள்ளனர். இ்ருப்பினும், அவர் குறித்த எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.

இன்று காலை தனது வீட்டு கிணற்றில் செல்வம் சடலமாக மிதந்து கொண்டிருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவலளித்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் செல்வத்தின் உடலை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கிணற்றிலிருந்து கூலி தொழிலாளி சடலம் மீட்பு

அதிகாரி முத்துக்கிருஷ்ணன் தலைமையில் செயல்பட்ட 6 வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி செல்வத்தின் சடலத்தை மீட்டனர். கொரட்டூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பொற்கொடி தலைமையில் விசாரணை நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க:தாம்பரம் மக்களை அச்சுறுத்தும் கொள்ளை சம்பவங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.