ETV Bharat / state

பிறந்த தேதியை ஏடிஎம் பின் நம்பராக வைத்த பெண்ணுக்கு ரூ.50,000 ஆயிரம் பறிபோனது - மர்ம நபர்கள்

கோயம்பேட்டில் பெண்ணின் பர்சை திருடி திருடன் ஒருவன் அதிலிருந்த ஏடிஎம் கார்டுக்கு எதார்த்தமாக அந்த பெண்ணுடைய பிறந்த தேதியை பதிவிட்டு ரூ.50 ஆயிரம் கொள்ளைடித்துள்ளான்.

பர்சை திருடிய திருடனுக்கு பிறந்த தேதியால் அடித்த அதிர்ஷ்டம்

author img

By

Published : Oct 4, 2022, 7:27 AM IST

சென்னை: திருவண்ணாமலையை சேர்ந்த ரேவதி செப். 30ஆம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அவரது அம்மா கோவிந்தாம்மா உடன் சென்றுள்ளார். அதன்பின் நேற்று பிற்பகல் வண்ணாரப்பேட்டையில் இருந்து பேருந்து மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் விருகம்பாக்கத்தில் உள்ள மற்றொரு உறவினரை சந்திப்பதற்காக புறப்பட்டார். இதனிடையே அவரது பர்ஸ் திருடப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் ரேவதியின் ஏடிஎம் கார்டில் இருந்து ரூ.50,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

உடனே ரேவதி கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பர்சில் ஏடிஎம் கார்டு, பணம், ஆதார் கார்டு, பான் கார்டு இருந்ததாக குறிப்பிட்டார். அந்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசாரிடம் விசாரணைக்கு மாற்றினர். முதல்கட்ட தகவலில், ரேவதி தனது ஏடிஎம் பின் நம்பராக தனது பிறந்த தேதி வைத்திருந்தது தெரியவந்தது. ஆகவே ஆதார் கார்டில் பிறந்த தேதியை பார்த்த திருடன் எதார்த்தமாக பயன்படுத்தி பணத்தை திருடியிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எந்த ஏடிஎம்மில் பணம் எடுக்கப்பட்டது என்பது குறித்து விவரங்களை சேகரித்து, அதன் மூலம் சிசிடிவி காட்சியை வைத்து திருடிய நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பிறந்த தேதி, வாகனத்தின் எண், செல்போனின் கடைசி நான்கு எண்கள், முதல் நான்கு எண்கள் போன்ற எண்களை ஏடிஎம் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கடவுச் சொற்களாக வைக்க வேண்டாம் என்று பொது மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பவுடர் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.