ETV Bharat / state

'பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு எனும் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது'

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என டாக்டர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது

author img

By

Published : Nov 8, 2022, 7:07 PM IST

சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, 'பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சட்டத்தின் 103ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும். அது அரசியல் அமைப்புச்சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானதல்ல என இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இது சமூக நீதிக்கோட்பாட்டிற்கும், அரசியல் அமைப்புச்சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கும் எதிரானது. பொருளாதார அடிப்படையை மட்டுமே அளவுகோலாக கொண்டு உலகில் எந்த நாட்டிலும் இடஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை. பொருளாதாரம் என்பது நிரந்தரமான ஒன்றல்ல என்பதே இதற்கு முக்கியக்காரணம்.
மேலும், பொருளாதார அடிப்படையை மட்டுமே அளவுகோலாக கொள்ளும்போது, அதை உயர் சாதிகளில் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே வழங்குவது என்பதும், அதிலிருந்து பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு விலக்கு வழங்கி இருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும்.
இதை தலைமை நீதியரசர் யு.யு.லலித் மற்றும் நீதியரசர் ரவீந்திர பட் ஆகியோரும் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, 103ஆவது அரசியல் சட்டத்திருத்தம், அரசியல் அமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானதல்ல என நீதிபதிகள் குறிப்பிடுவது ஏற்புடையதல்ல. இட ஒதுக்கீடு கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். எவ்வளவு காலத்திற்குத்தான் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பது. இட ஒதுக்கீடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படுவது சரியல்ல என்ற கருத்துகளும் வெளிப்பட்டுள்ளன.

2500ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நீதிக்கு, சமத்துவத்திற்கு எதிரான வேலைப்பிரிவினை இருந்ததைக் கவனத்தில் கொள்ளாமல், நீண்ட காலமாக புறக்கணிப்புக்கு உள்ளான பல கோடி மக்கள் இன்றளவும் சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின் தங்கி இருப்பதைக் கணக்கில் கொள்ளாமல், எத்தனைக் காலத்திற்குத்தான் இட ஒதுக்கீடு நீடிப்பது என்ற கேள்வியை எழுப்புவது, மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்தும் அராஜகப்போக்காகும்.

சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது அண்மைக்காலமாக ஏற்பட்ட ஒன்றுதான். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தான், சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தொடர்பான கருத்தியலும், கோரிக்கைகளும் எழுந்தன. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடே 2006க்கு பிறகுதான் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியில் நடைமுறைக்கு வந்தது. அதுவும் கிரீமிலேயர் நடைமுறைப்படுத்தப்பட்டதனால் முழுமையான பயன் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்திடவில்லை. அந்த 27 விழுக்காடும் படிப்படியாகவே நடைமுறைக்கு வந்தது. அதிலும் முறைகேடுகள் நடைபெறுகின்றன.

அதைப் போலவே மருத்துவக்கல்வியில் இளநிலை, முதுநிலை, மருத்துவ மற்றும் பல் மருத்துவப்படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு 2006 முதல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, சட்ட ரீதியான போராட்டத்திற்குப் பிறகு சென்ற ஆண்டு முதல் தான் இவ்வொதுக்கீடு நடைமுறைக்கு வந்துள்ளது.

சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தற்பொழுது தான் பல துறைகளில் வழங்கப்பட துவங்கியுள்ள நிலையில், அதுவும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், ஏதோ இட ஒதுக்கீடு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது போல் ஒரு தோற்றத்தை நீதிபதிகள் உருவாக்கி இருப்பது யதார்த்த நிலைக்கு எதிரானது. மிகவும் வருந்தத்தக்கது.

ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சம் வரை உள்ள, 5 ஏக்கர் வரை நிலம் உள்ள, 1000 சதுர அடி வீடுள்ள 900 முதல் 1800 சதுர அடி அளவில் வீட்டுமனை உள்ள உயர்சாதியினர்கூட பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என வரையறுத்திருப்பது அபத்தமானது. உயர் சாதியினரில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியோரை வரையறுப்பதில் மட்டும் மிகவும் தாராளத்தை ஒன்றிய அரசு காட்டியுள்ளது.

அவசர கதியில், சமூக நீதியை நீர்த்துப் போகச்செய்யும் வகையில், உயர் சாதியில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியோர் எவ்வளவு பேர் என்ற புள்ளிவிவரங்களும் இல்லாமல் ஒன்றிய அரசு 103ஆவது அரசியல் சட்டத்தை கொண்டுவந்தது.

எனவே, சமூக நீதிக்கோட்பாட்டிற்கு எதிரான 103ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்ற இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். அதிக நீதி அரசர்கள் கொண்ட, முழுமையான அரசியல் சட்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கருணை அடிப்படையில் பணி.. அரசு விடுத்த வார்னிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.