மாநிலம் முழுவதும் தற்போது வரலாறு காணாத அளவிற்கு வறட்சி நிலவி வருவதால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதை ஈடுசெய்ய தமிழ்நாடு முழுவதும் சுமார் 15,000க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் ஓடுகிறது. சென்னையை பொறுத்தவரையில் குடிநீர் வாரியம் 5,500 ஒப்பந்த லாரிகள் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த லாரிகளில் வரும் தண்ணீர் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தான் மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இதற்கு அதிகாரிகள் கடும் கெடுபிடிகள் செய்து வருவதாக தனியார் லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இதை கண்டித்து காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபடுப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனியார் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நிஜலிங்கம் தெரிவித்தார்.