ETV Bharat / state

Chennai Crime News: சென்னை மாநகரில் இன்று நடந்த குற்றச் சம்பவங்கள்! - தந்தையை கொலை செய்த மகன்

சென்னை மாநகரில் நாள்தோறும் கொலை, கொள்ளை, விபத்து, தற்கொலை உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடந்த சில குற்றம் மற்றும் விபத்து குறித்தான செய்திகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 14, 2023, 4:09 PM IST

தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த மகன் கைது: சென்னை கிண்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (55). இவருக்கு சுப்புலட்சுமி (48) என்ற மனைவியும், சுமித்ரா (28) மற்றும் ஜபரீஷ் (23) என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான பாலசுப்பிரமணி தினமும் குடித்துவிட்டு குடும்பத்துடன் தகராறில் ஈடுபட்டு வந்ததால், கடந்த ஒரு வருடமாக குடும்பத்துடன் பிரிந்து பாலசுப்பிரமணி வீட்டின் கீழ் உள்ள நடைபாதையில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 13) சுமித்ராவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதால் அவரது தம்பி ஜபரீஷ், சகோதரியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் இருவரும் வீடு திரும்பி உள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த பாலசுப்பிரமணி அவரது மகன் ஜபரீஷிடம், சகோதரி சுமித்ராவை பற்றி அவதூறாக பேசி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜபரீஷ், அவரது தந்தை பாலசுப்பிரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென கீழே கிடந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கலால் தந்தை பாலசுப்பிரமணியத்தின் தலையில் பலமாக தாக்கி உள்ளார். இதில் பாலசுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மகன் ஜபரீஷ் தனது தந்தையை கொலை செய்துவிட்டதாக கிண்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ஜபரீஷை கைது செய்தனர். இதற்கிடையே, பாலசுப்பிரமணியின் சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜபரீஷிடன் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பேருந்தில் ஏற முயன்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு: சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (19). இவர் கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று (ஜூலை 13) கல்லூரி முடிந்த பின்பு சூர்யா வழக்கம் போல சத்திரம் பேருந்து நிலையத்தில் 48c பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது கூட்டமாக வந்த பேருந்தில் முன்பக்க படிக்கட்டு வழியாக சூர்யா ஏற முயன்ற போது திடீரென ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியுள்ளார்.

இதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த சூர்யாவின் மீது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் சூர்யா உயிரிழந்தார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், மாணவன் சூர்யாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுநர் சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (57) என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Video: நடைமேடையில் உறங்கிய பெண்ணை தாக்கிய பெண் காவலர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.