சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வரும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு இத்திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளதால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மைசூர் பேலஸில் நடைபெற்று வந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது. இதனையடுத்து படக்குழுவினர் அனைவரும் சென்னை வந்தடைந்தனர். சிறிய ஓய்விற்குப் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.