ETV Bharat / state

அரசு மாதிரி பள்ளிகளில் சேர நுழைவுத்தேர்வு: பள்ளிகல்வித்துறை அறிவிப்பு - etvbharat tamil

தமிழ்நாடு அரசு புதிதாக தொடங்கப்பட உள்ள மாதிரி பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் சேர்ந்திட 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 4ஆம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு மாதிரி பள்ளிகளில் சேர நுழைவுத்தேர்வு

author img

By

Published : Mar 2, 2023, 7:40 AM IST

சென்னை: மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான நீட் தேர்வினை தமிழ்நாட்டில் எதிர்த்து வரும் நிலையில், மாதிரி பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இடம் வழங்க நுழைவுத் தேர்வை பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 15 மாதிரி பள்ளிகள் துவங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அந்த மாதிரி பள்ளிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகதரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உண்டு உறைவிட வசதியுடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் முதற்கட்டமாக 15 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளது. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன் படி வரும் 4ந் தேதி அரசு பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் சேர்ந்திட அடிப்படை தேர்வு நடத்தப்பட வேண்டும் என மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுதன் அறிவித்துள்ளார். இந்த தேர்வு வரும் சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். omr தாள்களை கொண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து வர வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 240 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது 120 மாணவர்களும், 120 மாணவிகளும் இந்த தேர்வினை எழுதவுள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில், மாணவர்கள் மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் மாதிரி பள்ளியில் மாணவர்களை சேர்க்க அடிப்படை தேர்வு முறையை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது அரசின் கொள்கைக்கு முரணாக இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட எதிர்கட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.