ETV Bharat / state

மாதிரி வாக்கு எண்ணும் முகாம்; தலைமை தேர்தல் துணைஆணையர்கள் ஆய்வு!

சென்னை: அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற மாதிரி வாக்கு எண்ணும் முகாமினை தலைமை தேர்தல் துணை ஆணையர்கள் பார்வையிட்டனர்.

தலைமை தேர்தல் துணைஆணையர்கள்
author img

By

Published : May 15, 2019, 11:19 PM IST

தமிழ்நாடு, கேரளா, குஜராத், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச மாநில, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வாக்கு எண்ணுவது தொடர்பாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதிரி வாக்கு எண்ணும் முகாமிலும் அவர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் உமேஷ் சின்ஹா, சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாஹூ உடன் இருந்தார்.

மாதிரி வாக்கு எண்ணும் மையம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் கூறுகையில், இந்த பயிற்சி மூலம் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணும் காலத்தில் சூழலுக்கு ஏற்ப சட்ட விதிகளுக்கு உட்பட்டு, என்ன முடிவு எடுப்பது, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். இம்முறை வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டியுள்ளதால் ஒப்புகை சீட்டை எண்ணிய பிறகே சுற்றுகளின் முடிவுகள் அறிவிக்கப்படும், என்றார்.

சென்னை - மாதிரி வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள் ஆய்வு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாதிரி வாக்கு எண்ணும் முகாமினை  தலைமை தேர்தல் துணை ஆணையர்கள் பார்வையிட்டனர்.

தமிழ்நாடு, கேரளம்,குஜராத் மாநிலம் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச மாநில மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வாக்கு எண்ணுவது தொடர்பாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வாக்கு பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணும் மாதிரி மையத்தில் நடைபெற்ற மாதிரி வாக்கு எண்ணிக்கை வகுப்பில் கலந்துகொண்டனர். இதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் உமேஷ் சின்ஹா, சந்தீப் ஷாக்க்ஷேனா, செலவின பார்வையாளர் பிரவீன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உடன் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ்,

இன்று நடைபெறும் இந்த மாதிரி வாக்கு எண்ணும் மையம் போலவே தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெற்ற அணைத்து மாநிலத்திலும் நடத்திவருக்கிறது. இதன் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணும் காலத்தில் சூழலுக்கு ஏற்ப சட்ட விதிகளுக்கு உட்பட்டு என்ன முடிவு எடுப்பது, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பாதுகாப்பு குறித்தான அறிவுரைகளும் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தான் இன்று  மாதிரி மையம் அமைக்கப்பட்டது. இதனை பார்வையிட்ட தலைமை தேர்தல் அதிகாரிகள் சில அறிவுரைகள் வழங்கினர்.

வாக்கு எண்ணிக்கை அன்று தொகுதிக்கு ஐந்து ஒப்புகை சீட்டு பெட்டிகளும் எண்ணப்படும். இது சட்டமன்ற தொகுதிக்கும் பொருந்தும். இம்முறை வாக்குபதிவு இயந்திரங்கள் உடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டி உள்ளதால் ஒப்புகை சீட்டை எண்ணிய பிறகே சுற்றுகளின் முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல் வாக்கு எண்ணும் நாளன்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டு பலப்படுத்தப்படும்.  என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.