புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு பேரவையில் பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்து அளித்தனர்.
இந்நிலையில் நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு ஆளும் காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்த்ததாகவும், ஆட்சி கவிழ்ப்புக்கு என்.ஆர். காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் துணைபோனதாகவும் கூறி புதுச்சேரி அண்ணா சிலை அருகே கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க : மனைவியின் ஆராய்ச்சி கட்டுரை திருட்டு - ஐஏஎஸ் அலுவலர் ட்விட்டரில் புகார்!