கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் இறைச்சி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலகளில் இருந்து இறைச்சிக்காக வரும் ஆடு, கோழிகள் நிறுத்திவைக்கப்பட்டதால் இறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இறைச்சியின் விலைகளும் உச்சத்தைத் தொட்டுள்ளது.
900 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ ஆட்டு இறைச்சி, தற்போது 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாநிலகளில் இருந்து வரும் ஆடு, கோழிகள் சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கும். ஆனால் அந்த சந்தை இல்லாததால் இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என இறைச்சி கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
கரோனா வைரஸ் மீனவர்களையும் விட்டுவைக்கவில்லை. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பிரபல மீன் சந்தையான லூப் சாலை, சிந்தாதிரிப்பேட்டை போன்ற இடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மீனர்வகள் வாழ்க்கை கடும் பாதிப்படைத்துள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சி சமூக இடவெளி பின்பற்றாத இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனக் கூறியதால் மக்கள் அனைவரும் கட்டம் இடப்பட்ட இடத்தில் நின்று வரிசையில் வாங்கிச் சென்றனர்.